நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து ஜெ.வுக்கு விலக்கு

இலங்கை தமிழர்களுக்காக தமிழக அரசின் சார்பில் நிதி திரட்டப்பட்டது குறித்து ஜெயலலிதா தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் மீது அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது.
இதை விசாரித்த நீதிமன்றம் நாளை ஜெயலலிதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதி்ல், என் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணனும், தமிழக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் மாசிலாமணியும் ஆஜராகி வாதிட்டனர். வழக்கு விசாரணைக்கு தடை கூடாது என்று அரசு வழக்கறிஞர் கோரினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராமநாதன், ஜெயலலிதா மீது அவதூறு வழக்கு தொடர அனுமதியளித்த முதல்வர் கருணாநிதி, தமிழக அரசின் பொதுத்துறைச் செயலாளர், சென்னை நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
மேலும் நாளை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது ஜெயலலிதா நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கும் அளித்தார்.
வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications