6 கலை-அறிவியல் கல்லூரிகளில் புதிய படிப்புகள்
சென்னை: தமிழகத்தில் ஆறு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் புதிய படிப்புகள் அறிமுகமாகின்றன.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 548 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சென்னை, வேலூர், மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி என ஆறு மண்டலங்களாக பிரித்து இயங்கி வருகின்றன.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து தற்போது இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகின்றன. இதுவரை தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் விண்ணப்பங்ள் வரை விற்பனை ஆகியிருப்பதாக தெரிகிறது.
திருச்சி அதிகம், திருநெல்வேலி குறைவு...
பொருளாதார மந்தம் காரணமாக தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டுள்ள லேசான பின்னடைவு காரணமாக திருச்சி மாவட்டத்தில் 36,866 விண்ணப்பங்கள் விற்று தீர்ந்துள்ளன. தமிழகத்தில் அதிகளவு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் விண்ணப்ப விற்பனை இங்கு தான நடந்துள்ளது.
என்றாலும் திருநெல்வேலி மண்டலத்தில் சுமார் 3,869 விண்ணப்பங்கள் மட்டுமே விற்றுள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர்கள் பொருளாதாரம் விரைவில் சரியாகும் என்ற நம்பிக்கையில் என்ஜினியரிங் படிப்புக்கு அதிகளவில் விண்ணப்பத்திருப்பதாக தெரிகிறது.
இதை தவிர்த்து கோவை மண்டலத்தில் 28,684, வேலூர் மண்டலத்தில் 20,571, மதுரை மண்டலத்தில் 19,246, சென்னை மண்டலத்தில் 9,513 விண்ணப்பங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
ரிடைல் மேனேஜ்மெண்ட்...
இந் நிலையில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 6ல் புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
கரூர் அரசு கலைக் கல்லூரியில் பி.காம் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்) படிப்பும், திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியில் எம்.எஸ்சி., (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படிப்பும் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரியி்ல் பி.ஏ. (ஜர்னலிஸம் & மாஸ் கம்யூனிகேஷன்) அறிமுகப்படுத்தப்பட்டுள்லது.
சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பி.சி.ஏவும், சிதம்பரம் அரசு கலைக் கல்லூரி மற்றும் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரியில் பி.பி.ஏ. (ரிடைல் மேனேஜ்மெண்ட்) படிப்பும் புதிதாக துவக்கப்பட்டுள்ளது.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
களக்காடு தலையணை, நம்பிகோயில் அருவிக்கு போறீங்களா! வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications