மதுராந்தகம்: லாரி-தபால் வேன் மோதல்- 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: மதுராந்தகம் அருகே லாரியும், தபால் வேனும் மேதிக் கொண்டதில் 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பலியாயினர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து காஞ்சிபுரம் வழியாக புதுச்சேரி நோக்கி இரண்டு லாரிகள் சென்று கொண்டிருந்தன. சிலிக்கான் மூட்டைகளை கொண்டு சென்ற அந்த லாரியில் ஒன்று மதுராந்தகம் அருகே தொழுபோடு என்ற இடத்தில் பஞ்சர் ஆனது.
இதையடுத்து இரண்டு லாரிகளும் நிறுத்தப்பட்டு, லாரியின் கிளீனர்கள் வெங்கடேசன், கோபி ஆகியோர் டயரை மாற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது சென்னையில் இருந்து திண்டிவனம் சென்ற தபால் துறைக்கு சொந்தமான வேன் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் லாரியின் கிளீனர்கள் இருவரும் பலியாயினர்.
தபால் வேன் டிரைவர் குப்பன், தபால் ஊழியர் ஜனார்த்தன் ஆகியோரும் உடல் நசுங்கி பலியாயினர்.












Click it and Unblock the Notifications