ஏசி வெடித்து குழந்தை உடல் கருகி பலி
தாம்பரம்: சென்னையில் ஏசி வெடித்து தீ பிடித்ததில் வருமான வரித்துறை அதிகாரி ஒருவரின் ஒன்றரை வயது பெண் குழந்தை உடல் கருகி பலியானது.
சென்னை சிட்லபாக்கம் எம்எம்டிஏ நகரை சேர்ந்தவர் ஸ்ரீவள்ளி (33). இவர் வருமான வரித்துறையில் பணியாற்றி வருகிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் இவரது கணவர் சண்முகசுந்தரம் சமீபத்தில் வேலை காரணமாக சிங்கப்பூர் சென்றார்.
இதையடுத்து வீட்டில் ஸ்ரீவள்ளி தனது எட்டு வயது மகன் நாகர்ஜூனன் மற்றும் ஒன்றரை வயது மகள் மோனிஷா ஆகியோருடன் இருந்தார். ஸ்ரீவள்ளி வழக்கம் போல் குழந்தைகளுக்கு நேற்று இரவு சாப்பாடு கொடுத்துவிட்டு அவர்களுடன் ஏசி அறையில் தூங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை அவர்கள் வீட்டிலிருந்து புகை வருவதை பார்த்த அக்கம்பக்த்தினர் தாம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கும், சிட்லாபாக்கம் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
தீ வேகமாக பரவி வருவதை பார்த்த பொது மக்கள் போலீசார் வரும் வரை காத்திருக்காமல் வீட்டை உடைத்து உள்ளே சென்றனர். புகை வரும் அறையின் கதவையும் உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.
அப்போது ஏசி வெடித்து தீ பரவியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் ஒன்றரை வயது குழந்தை மோனிஷா தீயில் கருகி பலியானது தெரியவந்துள்ளது.
வருமான வரித்துறை அதிகாரி ஸ்ரீவள்ளியும், அவரது மகனும் தீக்காயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் கிடந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மின்சார கோளாறு காரணமாக ஏசி வெடித்து இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு எதாவது காரணமா என்று விசாரணை நடக்கிறது.
ஸ்ரீவள்ளியும், அவரது மகனும் மயக்கம் தெளிந்து விளக்கம் தந்தால் தான் எதையும் உறுதிசெய்ய முடியும் என போலீசார் கூறினர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications