விடைத்தாள் திருத்தம்-கல்லூரி ஆசிரியர்கள் புறக்கணிப்பு
நாகர்கோவில்: சுயநிதி கல்லூரி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 'மூட்டா' (கல்லூரி ஆசிரியர்கள் சங்கம்) ஆசிரியர்கள் தேர்வு தாள் திருத்தும் பணிகளை புறக்கணித்தனர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் துவங்கியது. தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் நெல்லையில் இருக்கும் பல்கலைகழகம் பகுதியிலும், நாகர்கோவில் இந்து கல்லூரியிலும் நடந்து வருகிறது.
இந்நிலையில் மூட்டா சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் தூத்தூர் புனித யூதா கல்லூரி நிர்வாக்த்தின் நிதி நிர்வாக சீர்கேடுகளை அகற்ற வேண்டும் மற்றும் சுயநிதி கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சனைகள் மீது நியாயமான தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சில நாட்களுக்கு முன் விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேலும் அவர்கள் இன்று 2ம் தேதி முதல் தேர்வு தாள் திருத்தும் பணிகளை புறக்கணிக்க போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி அவர்கள் இன்று போராட்டத்தை துவக்கியுள்ளனர். நெல்லையில் 300 பேரும், நாகர்கோவிலில் 100 பேரும் இப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக விடைதாள் திருத்தும் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications