இலங்கையின் மறுசீரமைப்புக்கு உதவுவோம்-சீனா
கொழும்பு: இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்புக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக சீனாவின் வர்த்தக அமைச்சர் லியாங் வென்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிரான போர் முடிந்துவிட்டது. இதை தொடர்ந்து வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் சீனாவின் வர்த்தக அமைச்சரும், ஆசிய விவகாரங்களுக்காக துணை தலைமை இயக்குனருமான லியாங் வென்டோ கூறுகையில்,
இலங்கையில் அமைதி திரும்பியிருப்பது அந்நாட்டின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். இலங்கையின் வளர்ச்சி மற்றும் பொருளாதார சீரமைப்பு பணியில் சீனா தொடர்ந்து உதவும்.
போர் முடிந்துவிட்டதை அடுத்து இலங்கை தனது பழைய செழிப்பான வாழ்க்கைக்கு திரும்பும் என கருதுகிறோம். தற்போது இலங்கைக்கு என்ன தேவை என்றால் வளர்ச்சிக்கு தேவையான அமைதியான சுற்றுப்புறசூழல் தான். இதன்மூலம் அதிக வெளிநாட்டு மூலதனங்களை பெறலாம். இது போரால் பாதிக்கப்பட்ட அந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்.
பொருளாதாரம் மற்றும் சுற்றுலா துறையில் நாங்கள் இலங்கையுடன் இணைந்து செயல்படுவோம். இலங்கையில் இருக்கும் புத்த கோவில்களை காண ஏராளமான சீன பயணிகள் வருவார்கள் என்றார் அவர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications