கேரளா செல்லும் ரயில்களில் கூடுதல் பெர்த்கள்!

கடந்த சில வருடங்களாக தமிழகத்தின் வசம் இருந்து வந்த ரயில்வே இணை அமைச்சர் பொறுப்பு இந்த முறை கேரளாவைச் சேர்ந்த இ. அகமதுவுக்குப் போய் விட்டது.
இதனால் தமிழக ரயில் திட்டங்களுக்கும், பயணிகளுக்கான வசதிகளுக்கும் பாதிப்பு வரும் என்ற இயல்பான அச்சம் உள்ளது.
இந் நிலையில் கேரளாவின் வட பகுதியில் உள்ள நகரங்களுக்கு சென்னையிலிருந்து செல்லும் ரயில்களில் படுக்கை வசதிகளை அதிகரித்துள்ளார் அகமது.
அதாவது சென்னையிலிருந்து கண்ணூர், கோழிக்கோடு, தலிசேரி, திரூர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் ரயில்களில் 75 சதவீத அளவுக்கு படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அகமது தலைமையில் நடந்த தெற்கு ரயில்வே ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த முடிவின்படி சென்னை சென்டிரல் - மங்களூர் மெயில்கள், சென்னை சென்டிரல் - மங்களூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள், சென்னை சென்டிரல் - மங்களூர் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள், சென்னை எழும்பூர்- மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயி்ல்களில் கேரள பயணிகளுக்காக படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படுகின்றன.
தற்போது இந்த ரயில்களில், ஷோரனூர் வரையில் உள்ள நிலையங்களுக்கு மட்டுமே படுக்கை வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புதிய உத்தரவின் மூலம் புதிதாக 2943 படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications