ஒபாமாவுக்கு மிரட்டல்-நியூயார்க் நபருக்கு வலை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை கொல்ல போவதாக மிரட்டிய 8 துப்பாக்கி லைசென்ஸ்களுக்கு சொந்தக்காரரான நியூயார்க் நகரை சேர்ந்த ஆசாமி ஒருவரை அமெரிக்க போலீஸ் தேடி வருகிறது.
அமெரிக்க அதிபர் ஒபாமா தற்போது எகிப்தில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு ஜெர்மனி சென்றுள்ளார். இந்நிலையில் அவரை கொலை செய்ய போவதாக நியூயார்க்கை சேர்ந்த டேனியல் ஜேம்ஸ் முர்ரே என்பவர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கொடுக்கப்பட்டுள்ள புகார் மனுவில்,
கடந்த மே 19ம் தேதி முர்ரே உடா மாநிலத்தில் உள்ள ஜியன்ஸ் பர்ஸ்ட் நேஷனல் வங்கியில் புதிய கணக்கு ஒன்றை தொடங்கினார். அதில் ரூ. 42 லட்சத்தை சேமிப்பில் வைத்தார்.
பின்னர் அங்கிருந்த வங்கி ஊழியரிடம் ஒபாமாவை கொல்வது தான் எங்கள் லட்சியம். அமெரிக்காவில் வங்கிகள் நலிவடைந்து, இழுத்து மூடப்படுவதற்கு ஒபாமாவின் கொள்கைகள் தான் காரணம். தங்களது பணம் காணாமல் போனால் மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள் பொங்கி எழுந்துவிடுவார்கள்.
அப்போது நாம் கொலைகளையும், பிணங்களையும் தான் பார்க்க முடியும் என்று கூறியுள்ளார்.
பின்னர் அவன் மே 27ம் தேதி போதிய ஆவணங்கள் இல்லாமல் வந்து ரூ. 6 லட்சத்தை வங்கி கணக்கில் இருந்து எடுக்க வந்துள்ளார். ஆனால், ஆவணங்கள் இல்லாததால் வங்கி ஊழியர்கள் பணம் கொடுக்கவில்லை.
இதையடுத்து அவர் மரியாதை இல்லாமல் நடந்து கொள்ள வேண்டாம். எனக்கு பணம் கிடைக்கவில்லை என்றால் யாராவது ஒருவரின் உயிர் பறிபோய்விடும் என மிரட்டியுள்ளான்.
பின்னர் ஒரு வழியாக வங்கி அவனுக்கு செக் கொடுத்தது. ஆனால் அவன் அதை வாங்க மறுத்தவிட்டார். சில்லரை நோட்டுக்களாக வேண்டும் என கேட்டு வாங்கிப் போயுள்ளார். நான் ஆயிரம் கிலோமீட்டர் தாண்டி வந்துள்ளேன்.
அடுத்து என்ன நடக்க போகிறது என்பது எனக்கு தெரியும். வங்கிகள் திவாலாக இருக்கின்றன. மக்கள் சாகப் போகிறார்கள். இந்த உலகமே பெரும் குழப்பத்தில் சிக்கி தவிக்க போகிறது என்றார்.
பின்னார் அதிபர் ஒபாமாவை கொலை செய்ய போவதாகவும் மிரட்டினார். மறுநாள் மீண்டும் வந்து அனைத்து பணத்தையும் எடுத்துவிட்டு, கணக்கை முடித்துவிட்டார். அவரிடம் எட்டு துப்பாக்கிகளுக்கான லைசென்ஸ் உள்ளது என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து போலீசாரை முர்ரேவை தேடி வருகின்றனர்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications