பயணிக்கு நெஞ்சுவலி-சென்னையில் விமானம் அவசர தரையிறக்கம்
சென்னை: சிங்கப்பூரில் இருந்து லண்டன் சென்று கொண்டிருந்த விமானத்தின் பயணிக்கு ஒருவருக்கு நடுவானில் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து விமானம் அவசரமாக சென்னையில் தரையிறங்கியது.
சிங்கப்பூரில் இருந்து நேற்று இரவு 150 பயணிகளுடன் விமானம் ஒன்று லண்டன் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதிகாலை 1.50 மணிக்கு மேல் விமானம் சென்னைக்கு அருகே வந்து கொண்டிருந்த போது விமானத்தில் இருந்த சுவிட்சர்லாந்தை சேர்ந்த 75 வயது பயணி ஜான்சன் என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதையடுத்து விமானியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை விமான நிலையத்தை தொடர்பு கொண்டு விஷயத்தை விவரமாக எடுத்து கூறி அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார்.
சென்னை விமான நிலையத்தில் சாதகமான பதில் வர விமானம் சென்னையில் தரையிறங்கியது. இதையடுத்து அந்த பயணி அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் வந்த மற்றொரு பயணி அவருக்கு துணையாக மருத்துவமனையில் இருக்கிறார்.
இதையடுத்து மற்ற பயணிகளை ஏற்றி கொண்டு விமானம் சுமார் 1 மணி நேரம் தாமதமாக மீண்டும் லண்டன் புறப்பட்டது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம்












Click it and Unblock the Notifications