என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
நெய்வேலி: ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்க பொது செயலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து நெய்வேலி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.
என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் சிலர் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் மூலம் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இச்சங்கத்தினர் அதற்கான அறிவிப்பை ஊர்வலமாக சென்று என்எல்சி தலைமை அலுவலகத்தில் கொடுத்தனர்.
இதையடுத்து நெய்வேலி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் பணியாற்றும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளர் வெங்கடேசன் வேலைக்கு சென்றபோது, அவரை வேலை செய்ய ஒப்பந்தக்காரர் அனுமதிக்கவில்லை. மேலும் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவி்ததுள்ளது.
இது தொடர்பாக நிர்வாகத்திடம் அவர் கேட்ட போது ஒப்பந்தக்காரர்கள், நீங்கள் இரவுநேர பணிக்கு மட்டுமே வருகிறீர்கள். சில நாட்கள் தொடர்ந்து விடுமுறை எடுத்து கொள்கிறீர்கள் என கூறியுள்ளது. இந்த விஷயத்தில் தங்களால் எதுவும் செய்ய முடியாது என நிர்வாகம் கூறிவிட்டது.
இதை கண்டிக்கும் விதமாக இரண்டாவது அனல் மின் நிலையம் மற்றும் இரண்டாவது சுரங்கத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications