தர்மபுரி இந்தியன் ஆயில் குடோனில் தீ விபத்து-ரூ. 1 கோடி நஷ்டம்
தர்மபுரி: தர்மபுரி அருகே இந்தியன் ஆயில் நிறுவன ஏஜென்சியின் குடோனில் தீ பிடித்ததை அடுத்து ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கான மொத்த விற்பனை ஏஜென்சி நிறுவனம் தர்மபுரியில் உள்ளது. இதை தர்மபுரியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் எடுத்துள்ளார்.
தர்மபுரி, வள்ளலார் மைதானத்துக்கு அருகில் இருக்கும் அந்த ஆயில் குடோனில் சர்வே லூப்ரிகண்ட் ஆயில்களை சேமித்து வைத்திருந்தார்.
இந்நிலையில் அதிகாலை 4.30 மணிக்கு ஆயில் குடோனில் திடீரென்று தீப்பிடித்து எரித்தது. இதையடுத்து அருகிலிருந்தவர்கள் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
கொளுந்து விட்டு எரிந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடினர். எண்ணெய் பொருட்கள் தீப்பற்றி எரிந்ததால் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து ஏஎப்எப்எப் எனப்படும் நுரையை உருவாக்கி தீயை அணைக்கும் பொருட்களை பயன்படுத்தி தீயை அணைத்தனர்.
சுமார் 3 மணி நேரத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான எண்ணெய் பொருட்கள் எரிந்து நாசமானதாக தெரிகிறது. விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. தர்மபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications