பஸ் கட்டண குறைப்பு-அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை
சென்னை: தமிழகத்தில் பஸ் கட்டணத்தை குறைப்பது குறித்து பரிசீலித்து முடிவெடுக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் நல சங்கத்தின் சட்ட ஆலோசகர் ஜெயராமன் உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,
கடந்த ஏப்ரல் 30ம் தேதி தமிழக அரசு சுமார் 60 சதவீதம் அளவுக்கு பஸ் கட்டணத்தை குறைத்து உத்தரவிட்டது. தேர்தல் நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியானதால் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தேர்தல் நடத்தை விதி மீறல் நடந்துள்ளதாகக் கூறி தலைமை தேர்தல் அதிகாரியிடம் அவர்கள் புகார் செய்தனர்.
பஸ் கட்டண குறைப்பு குறித்து தலைமைச் செயலாளரிடம் இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது. இதையடுத்து தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆனால் அவரது விளக்கத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து விட்டது.
மீண்டும் பழைய கட்டணத்தை அமல்படுத்தும்படி தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மே 4ம் தேதி முதல் பழைய கட்டணம் அமல்படுத்தப்பட்டது.
அரசு பஸ் கட்டணத்தை குறைத்ததை ஏழை எளிய மக்கள் வரவேற்றார்கள். ஆனால் பஸ் கட்டணத்தை மீண்டும் உயர்த்தியது அவர்களுக்கு மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரி தலைமைச் செயலாளர், போக்குவரத்து துறை செயலாளர், போக்குவரத்து நிர்வாக இயக்குனர் ஆகியோருக்கு மனு செய்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே மீண்டும் கட்டண குறைப்பை அமல்படுத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி டி. முருகேசன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், பஸ் கட்டணக் குறைப்பு என்பது அரசின் கொள்கை முடிவாகும். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. இருப்பினும் மக்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாலும், ஏற்கனவே மனுதாரர் இந்தக் கோரிக்கையை அரசுக்கு அனுப்பியுள்ளதாலும் அது குறித்து பரிசீலித்து அரசு உரிய முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டு மனுவை பைசல் செய்வதாக அறிவித்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications