தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யலாம்
சென்னை: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் பெருவாரியான பகுதிகளி்ல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழக கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. கூடவே பலத்த காற்றும் வீசி வருவதால் மக்கள் பீதியுடன் உள்ளனர்.
பெளர்னமி, கடலில் ஏற்பட்ட புயல் சின்னம், தென் மேற்குப் பருவ மழையின் தொடக்கம் என்று இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகிறது.
இந்த தொடரும் கடல் சீற்றம் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் போக முடியாமல் தவித்துக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். சென்னையில் மாலை அல்லது இரவில் ஒரு சில பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தரைக்காற்று அவ்வப்போது அதிகமாக வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்குப் பருவ மழை மீண்டும் சூடு பிடித்துள்ளதால் நெல்லை, குமரி மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குற்றாலத்தில் சீசன் முழு வீச்சில் தொடங்கியுள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications