போர் ஓய்ந்தும் கூட ஈழத்தில் தமிழர்கள் கஷ்டம் தீரவில்லை - கனிமொழி
டெல்லி: இலங்கையில் போர் ஓய்ந்தும் கூட அங்கு தமிழர்களின் கஷ்டங்களுக்கு இன்னும் விடிவு பிறக்கவில்லை. அங்கு நிலையான தீர்வு ஏற்பட இந்தியா உதவ வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி, ராஜ்யசபாவில் கோரினார்.
ராஜ்யசபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்து வருகிறது.
இதில் கலந்து கொண்டு, கனிமொழி பேசினார். அப்போது அவர் பேசுகையில்,
இலங்கை தமிழர்களின் பாடுகள் பற்றி உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இலங்கையில் போர் முடிந்து விட்டது. மக்களின் கஷ்டங்கள் தீரவில்லை. ஏனெனில், அங்கு தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்படுகிறது.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் தமிழ் மக்களுக்கு வாழும் உரிமையும் மறுக்கப்பட்டு உள்ளது. அவர்களை சம குடிமக்களாக கருதப்படும் உரிமை மறுக்கப்படுகிறது.
எனவே, இலங்கையில் தற்போது போர் முடிந்துள்ள நிலையில் இந்திய அரசுக்கு பெரும் பங்கு உண்டு. அந்த மக்களை தங்கள் இல்லங்களில் குடிஅமர்த்த செய்வது, பரம்பரை வீடுகளில் வாழ வைப்பது, நிலையான அரசியல் தீர்வு காண்பதில் மத்திய அரசுக்கு பெரும் பொறுப்பு உள்ளது.
மகளிர் மசோதா
இன்னும் 100 நாட்களில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா அறிமுகம் செய்யப்படும் என்று குடியரசுத் தலைவர் கூறியுள்ளார். ஆனால், அந்த மசோதாவிற்கு ஏற்கனவே பல தடைகள் இருக்கின்றன.
இந்த மசோதாவை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று அச்சுறுத்தும் மக்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்த மசோதாவிற்கு தி.மு.க. உறுதியான ஆதரவு அளித்து உறுதுணையாக இருக்கிறது.
பாராளுமன்றத்தில் 543 உறுப்பினர்களில் தற்போது 58 மகளிர் மட்டும் உறுப்பினர்களாக இருக்கும் ஒரு வருத்தமான நிலை இருக்கிறது. இது 10 சதவீதம் மட்டும் ஆகும். மேல்-சபையில் 22 பெண் உறுப்பினர்கள் இருக்கின்றனர். இது 9.6 சதவீதம்தான்.
எனவே, நமது கொள்கை முடிவுகள் எடுக்கும்போது 50 சதவீதம் இருக்கும் பெண்கள் விடுபட்டுவிடாத வகையில் மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்ததாக ஜனாதிபதி உரையில் பெண் கல்வி பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. இதை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
சமுதாயத்தின் மற்றொரு பிரிவான அரவாணிகளும் புறக்கணிக்கப்படுகின்றனர். சமுதாயத்தில் அவர்கள் எல்லா வகையான பாகுபாடுகளையும் அனுபவித்து வருகின்றனர்.
எனவே, அரசு அவர்களுக்கு உரிமையுள்ள குடிமக்களுக்கான அங்கீகாரம் அளிக்க வேண்டும். அரசு திட்டத்தின் பலன்கள் அவர்களுக்கும் போய் சேர வேண்டும். தேவைப்பட்டால் அரவாணிகளுக்கு தனியாக ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
சேது சமுத்திர திட்டத்தை பல காரணங்களுக்காக பல கட்சியினர் தடை செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால், இந்தத் திட்டம் ஒவ்வொரு தமிழனின் கனவு ஆகும். இந்த திட்டத்தின் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும்.
சேது சமுத்திர திட்டம் மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் திட்டம் ஆகும். கடலோரப் பகுதிகளில் பல தொழிற்சாலைகள் வரும். துறைமுகங்கள் மேம்படுத்தப்படும். எனவே, இந்தத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்பது தமிழகத்திற்கும், தென்னகத்திற்கும் அநீதி இழைப்பதாகும்.
விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்ததற்காக பாராட்டுகிறேன். அது அவர்களின் பிரச்சினைகளை பெருமளவுக்கு தீர்த்து வைத்தது. ஆனால், மீனவர்களை நாம் விட்டுவிட்டோம். பருவகால மாற்றத்தால் மீனவர்கள் பாதிக்கப்படுவது பற்றி உங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில்கூட கடல் கொந்தளிப்பால் மீனவர்களின் வீடுகள் அடித்து செல்லப்பட்டுவிட்டன. மீனவர்களால் மீன்பிடிக்க போக முடியவில்லை. இந்த மக்கள் மீண்டும், மீண்டும் பாதிக்கப்படுகின்றனர்.
ஆனால், அவர்களுக்கு பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை. அவர்கள் முழு அளவில் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்.
கல்வியை எடுத்துக் கொண்டால் மீனவ சமுதாயத்தில் 2 சதவீதம் பேர்தான் படித்துள்ளனர். எனவே, அவர்களது கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும். நதிநீர் பங்கீட்டு விஷயத்தில் தமிழ்நாடு பாதிக்கப்பட்டு உள்ளது. இதில், மத்திய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றார் கனிமொழி.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications