சென்னை கொலை-கேரள வியாபாரி திடுக் தகவல்
சென்னை: சென்னையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு தலை, உடல், கை, கால் தனித் தனியாக துண்டிக்கப்பட்ட கோர சம்பவத்தில், கொலையுண்ட தங்க நகை வியாபாரியிடம் தான் 2 கிலோ நகைகளை கொடுத்துச் சென்றதாக கேரள நகை வியாபாரி புதுத் தகவலை வெளியிட்டுள்ளார்.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். அதில் வருமானம் போதவில்லை என்பதால் பழைய தங்க நகைகளை வாங்கி விற்கும் கமிஷன் வியாபாரத்திலும் ஈடுபட்டிருந்தார்.
பெரும்பாலும் திருட்டு நகைகளை வாங்கி விற்பது அவரது வழக்கம் என்று கூறப்படுகிறது.
2 நாட்களுக்கு முன்பு சுரேஷ்குமார் கோரமாக கொலை செய்யப்பட்டார். அவரது தலையில்லாத உடல், கைகள், கால்கள் தனித் தனியாக 3 தெருக்களில் கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
ஆனால் இதுவரை அவரது தலை கிடைக்கவில்லை. கொலையாளிகள், சுரேஷ்குமாரின் தலையை எங்காவது கொண்டு சென்று எரித்திருக்கலாம் அல்லது தண்டவாளத்தில் போட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
தண்டவாளத்தில் போடப்பட்டிருந்தால் ரயில் ஏறி தலை சின்னாபின்னமாகியிருக்கும். எனவே தலை கிடைக்காவிட்டால் சுரேஷ்குமார் கொலையாளிகளை கண்டுபிடிப்பது சிரமம் என போலீஸார் கூறுகின்றனர்.
கேரள வியாபாரியின் புதுத் தகவல்...
இதற்கிடையே, சுரேஷ் குமார் கொலையுண்ட நாளில் அவருடன் கோபி என்ற கேரள நகை வியாபாரி 2 முறை செல் போனில் பேசியுள்ளார் என்ற தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது.
அன்று மாலை 5 மணி வரை செளகார்பேட்டை பகுதியில்தான் சுரேஷ் இருந்துள்ளார். அதன் பின்னர்தான் அவர் கடத்தப்பட்டிருக்கிறார்.
அன்றைய தினம், கோபி, சுரேஷ்குமார் வீட்டுக்குப் போன் செய்தார். நான் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுரேஷுக்காக காத்திருக்கிறேன், அவர் வருவதாக கூறினார். ஆனால் வரவில்லை என்று கூறியுள்ளார்.
பின்னர் மீண்டும் போன் செய்து நான் கேரளாவுக்குப் புறப்பட்டு விட்டேன் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து கோபியைப் பிடித்து விசாரிக்க தனிப்படை போலீஸார் கேரளா விரைந்தனர்.
கோபியைப் பிடித்து விசாரித்தபோது புதுத் தகவல் ஒன்றை அவர் கொடுத்தார்.
அவர் போலீஸாரிடம் தெரிவிக்கையில்,
கடந்த சனிக்கிழமை மாலை நான் சுரேஷ்குமாரை வந்து பார்த்தேன். 2 கிலோ 150 கிராம் எடை கொண்ட பழைய நகைகளை அவரிடம் கொடுத்து அதற்கு பதிலாக புதிய நகைகளை எனக்கு வாங்கித் தருமாறு கேட்டேன்.
அவரும் அந்த நகைகளை என்னிடமிருந்து பெற்றுக் கொண்டு புதிய நகைகளையும், சில பழைய நகைகளை விற்று பணமும் கொண்டு வருவதாக கூறிச்சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வரவில்லை.
எனவே செல்போனில் சுரேஷ்குமாரை தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் செல்போன் எடுக்கவில்லை. இரவு முழுவதும் காத்திருந்தேன். அப்போதும் அவர் வரவில்லை.
எனவே பிறகு வந்து அவரிடம் புதிய நகைகளையும், பணத்தையும் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்து காலையில் அவரது வீட்டிற்கு போன் செய்து இந்த தகவலை கூறி விட்டு கேரளாவுக்கு புறப்பட்டு சென்று விட்டேன் என்று கூறியுள்ளார் கோபி.
கோபி கொடுத்த நகைகளுடன் சென்ற பிறகுதான் சுரேஷ்குமார் கொல்லப்பட்டிருக்கிறார்.
முன்விரோதத்தால் கொலை - கமிஷனர்
இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகர ஆணையர் ராஜேந்திரன், இந்தக் கொலை தனிப்பட்ட முன்விரோதம் காரணமாகவே நடந்திருப்பதாக புதிய தகவலைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நகை வியாபாரி கொலை தொடர்பாக துப்பு துலங்கி உள்ளது. சில தகவல்கள் கிடைத்துள்ளன.
கொலைக்கு தொழில் போட்டி காரணம் இல்லை. தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம். கொலையுண்டவரின் தலை இன்னும் கிடைக்க வில்லை. தொடர்ந்து போலீ சார் தீவிரமாக தேடி வருகி றார்கள்.
பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள் என்றார் அவர்.
கூலிப் படை...
சுரேஷ்குமாரைக் கொன்ற கொலையாளிகள் இரக்க மனமே இல்லாத இரும்புக் குணம் உடையவர்கள் எனக் கருதப்படுகிறது. காரணம், அவரைக் கொன்று உடலை தனித் தனியாக வெட்டியுள்ளனர். பின்னர் உடலில் ரத்தக் கறை இல்லாத அளவுக்கு தண்ணீர் ஊற்றிக் கழுவி அதன் பின்னர்தான் பையில் போட்டு தெருவில் வீசியுள்ளனர்.
இதனால் கொலையாளிகள் இதுபோன்ற கோரக் கொலைகளில் அனுபவம் உடைய கூலிப் படையினராக இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
எந்த வகையிலும் தடயம் சிக்கி விடக் கூடாது என்ற கவனத்துடன் அவர்கள் செயல்பட்டிருப்பது தெரிகிறது. அதற்கேற், இப்போது போலீஸாருக்கு எந்தவித தடயமும் கிடைக்காமல் பெரும் குழப்பமாக உள்ளது.
-
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை!












Click it and Unblock the Notifications