ஆஸ்திரேலியரை அடித்து, உதைத்த இந்திய மாணவர்கள்

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். சமீபத்தில் ஆஸ்திரேலியர்கள் இந்தியர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட தாக்குதலில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜனின் உறவினர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் பல மாணவர்களுக்கு கத்தி குத்து விழுந்துள்ளது.
இந் நிலையில் இந்தியர்களை தகாத வார்த்தைகளை பிரயோகப்படுத்தி பேசிய ஆஸ்திரேலியர் ஒருவரை இந்திய மாணவர்கள் அடித்து உதைத்துள்ளனர். தங்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது இருந்த ஓட்டுமொத்த கோபத்தையும் அவரிடம் காட்டியுள்ளனர்.
20 வயது மதிக்கத்தக்க அந்த ஆஸ்திரேலிய இளைஞர், நீங்கள் கறுப்பர்கள்... அதனால், இங்கே இருக்கக் கூடாது. நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று இந்திய மாணவர்களை திட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து விக்டோரியா பகுதி அமைப்புக்குழு தலைவர் அப்ரா என்பவர் கூறுகையில், இந்திய மாணவர்கள் சட்டத்தை கையில் எடுத்திருப்பதை அனுமதிக்க கூடாது என்றார்.
மேலும் அங்குள்ள இந்து அமைப்புகளும் ஆஸ்திரேலியர் தாக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளன.
இந் நிலையில் இந்திய மாணவர்கள் குழுக் குழுவாக சேர்ந்து ரோந்து சுற்றுவதைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலிய காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இனவெறித் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் இந்திய மாணவர்கள் கூட்டாக ரோந்துப் பணியில் ஈடுபட ஆரம்பித்துள்ளது குறி்ப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications