சத்யம்: ரூ.10000 கோடி நஷ்ட ஈடு கேட்டு க்யூவில் நிற்கும் நிறுவனங்கள்!
டெல்லி: சத்யம் நிறுவனம் தொடர்புடைய பல்வேறு வழக்குகளில் இதுவரை ரூ.10000 கோடிக்கு நஷ்ட ஈடு கேட்டு நிறுவனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
வழக்குத் தொடர்ந்துள்ளவற்றில் பல நிறுவனங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவை. 37 நிறுவனங்களோ, யார் என்றே தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது சத்யம் புதிய நிர்வாகம்.
இவற்றைத் தவிர, பிரிட்டன் நிறுவனம் ஒன்று 1 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.
சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு மோசடியை ஒப்புக் கொண்ட பிறகு, அமெரிக்காவில் தொடரப்பட்ட இரு நஷ்ட ஈடு வழக்குகளும் இன்னும் முடிந்தபாடில்லை.
சத்யம் நிறுவனத்தின் நிர்வாகத்தை அரசு ஏற்றதும், அமெரிக்காவில் மட்டுமே 12க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. போலி முதலீட்டாளர்கள், போலி முதலீடுகளைக் காட்டி தங்களை சத்யம் ஏமாற்றிவிட்டதாக அவர்கள் இந்த வழக்கினைத் தொடர்ந்துள்ளனர்.
இப்படி தொடரப்பட்டுள்ள வழக்குகளில் சத்யத்துக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால் குறைந்தபட்சம் ரூ.10000 கோடி வரை நஷ்ட ஈடாகவே தரவேண்டியிருக்கும் சத்யம்.
ஆனால் தற்போது நடக்கிற வழக்குகளைத் தவிர்த்து, அடையாளம் தெரியாத நிறுவனங்களிடமிருந்து வந்துள்ள வக்கீல் நோட்டீஸ்களுக்கு தாங்கள் பதில் சொல்லப் போவதில்லை என சத்யம் நிர்வாகம் அறிவித்துள்ளது. புலனாய்வு விசாரணைகள் முடிந்த பிறகே இதுகுறித்து மேல் விபரங்கள் சொல்ல முடியும் என்றும் சத்யம் அறிவித்துள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications