ஆஸி. விமானத்தில் தீ- 203 பேர் உயிர் தப்பினர்

ஜப்பானின் கன்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகருக்கு சுமார் 190 பயணிகள் உட்பட 203 பேருடன் ஜெட் ஸ்டார் நிறுவன விமானம் சென்று கொண்டிருந்தது.
ஏர் பஸ் ஏ 330 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் பயணிக்கத் துவங்கிய நான்காவது மணி நேரத்தில் விமானியின் அறையில் திடீரென தீ பிடித்தது. இதையடு்தது சுறுசுறுப்பாக செயல்பட்ட விமான ஊழியர்கள் தீயணைப்பு கருவிகளுடன் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.
இதையடுத்து அந்த விமானத்தில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதைத் தொடர்ந்து அந்த விமானம் பசிபிக் பெருங்கடலில் இருக்கும் குவாம் தீவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இது குறித்து அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் சைமோன் பிரேகெலியோ கூறுகையில், விமானத்தில் இருந்தவர்களில் பெரும்பாலோனர் ஜப்பானியர்கள். 57 பேர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள். விமானியின் அறையில் தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இந்த விமானம் தயாரிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆகிறது என்றார்.
சமீபத்தில் பிரேசிலில் இருந்து பிரான்ஸ் செல்லும் வழியில் அட்லாண்டிக் கடலி்ல் விபத்துக்குள்ளான விமானமும் ஏ 330 ரகத்தைச் சேர்ந்த ஏர் பஸ் விமானம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
