மேம்பாலம்: ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்-ஸ்டாலின்
சென்னை: பெரம்பூர் மேம்பால பணிகள் நிறைவுபெற்றவுடன் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த 1999ல் துவக்கப்பட்ட பெரம்பூர் மேம்பால திட்டம் நடுவில் ஆட்சி மாற்றம் மற்றும் சில அரசியல் காரணங்களுக்காக தடைபட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு திமுக அரசு இந்த திட்டத்தை மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது.
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக ரூ. 34.84 கோடியில் முடிக்கப்படும் என கூறப்பட்ட இத்திட்டத்தின் புதிய மதிப்பீடு ரூ. 51 கோடியாக உயர்ந்துள்ளது. வீணான தாமதங்களால் தற்போது அரசுக்கு சுமார் ரூ. 15 கோடிக்கு மேல் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.
சுமார் 1.038 கிமீ., தூரம் கொண்ட இந்த மேம்பாலத்தில் தற்போது மொத்தமுள்ள 36 தூண்களில் 29 தூண்கள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது.
இன்று இந்த மேம்பால பணிகளே துணை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் சென்னை மேயர் சுப்பிரமணியன், விஎஸ் பாபு எம்எல்ஏ ஆகியோர் சென்றனர். அப்போது ஸ்டாலின் கூறுகையில்,
திமுக ஆட்சியின் போது கடந்த 1999ல் 10 மேம்பாலங்கள் கட்ட முடிவு செய்தோம். அதில் 9 திட்டங்களை நிறைவேற்றிவிட்டோம். கடைசி திட்டமான பெரம்பூர் மேம்பாலம் சில தொழில்நுட்ப பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டது தாமதமானது.
இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் 2006ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இதற்கான பணிகள் மீண்டும் 12.06.2008 அன்று துவங்கின. இத்திட்டம் பிப்ரவரி 2010க்குள் அதாவது 20 மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் இதன் பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டு டிசம்பருக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும். மேம்பாலம் திறக்கப்பட்டவுடன் போக்குவரத்து தடையூறாக இருக்கும் ஆக்கமிரப்புகள் அகற்றப்படும் என்றார்.
மதுரை மேம்பால பணி-அழகிரி பார்வை:
இதற்கிடையே மதுரை செல்லூர் மேம்பால பணிகளை மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் அழகிரி பார்வையிட்டார். அந்தப் பணிகளை விரைவுபடுத்துமாறு உடன் வந்த மதுரை கலெக்டர் ரதிவாணன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் கணேசன் ஆகியோரிடம் அழகிரி கேட்டுக் கொண்டார்.
-
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ! -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்! -
18-ஆ? 25-ஆ காங்கிரஸுக்கு? அப்ப அதிமுக 210, திமுக 200 சீட்? சென்னை டூ கன்னியாகுமரி வரை திடீர் சேஞ்ச்? -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
12 காங்.எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடையாதா? "டாப்பில்" செல்வப்பெருந்தகை? திமுக நெருக்கடி? -
தென் மண்டலத்திற்கு திமுக பக்கா ஸ்கெட்ச்.. களமிறங்கிய ஓ.பன்னீர்செல்வம்.. பிரச்சாரத்தை தொடங்கினார் -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
ஆள் பார்த்து போடுங்க.. இப்பவே உள்ளடி வேலை கையை மீறி போகுதே.. ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியுமா? -
அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்! -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்! -
அடேங்கப்பா.. இது லிஸ்டுலேயே இல்லையே.. ஸ்டாலின் எடுத்த முடிவு.. மிக முக்கிய எம்எல்ஏவிற்கு நோ சீட்? -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது!












Click it and Unblock the Notifications