கருணாநிதி-கொங்கு நாடு கட்சி நிர்வாகிகள் சந்திப்பு
சென்னை: முதல்வர் கருணாநிதியை கொங்கு நாடு முன்னேற்றக் கழக நிர்வாகிகள் சந்தித்து கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
லோக்சபா தேர்தலின்போது உருவான கட்சி கொங்கு நாடு முன்னேற்றக் கழகம். மேற்கு மண்டலத்தில் இந்தக் கட்சி கணிசமான வாக்குகளைப் பிரித்ததால் காங்கிரஸ் கட்சி பல தொகுதிகளில் மண்ணைக் கவ்வ நேரிட்டது.
வலுவான ஜாதிக் கட்சியாக உருவெடுத்திருக்கும் கொங்கு நாடு முன்னேற்றக் கழக கட்சியின் நிர்வாகிகள் அதன் தலைவர் பெஸ்ட் ராமசாமி தலைமையில் நேற்று முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர்.
அவருடன் கெளரவத் தலைவர் தேவராஜன், பொதுச் செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் பாலசுப்ரமணியன் ஆகியோரும் அறிவாலயத்தில் கருணாநிதியை சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ராமசாமி பேசுகையில், தமிழகத்தில் உள்ள தென்னை, பனை மர விவசாயிகளை பாதுகாக்க வேண்டுமானால், கள் இறக்க உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதியிடம் வலியுறுத்தினோம்.
கள் இறக்குவது கூடாது எனவோ, தவறு எனவோ முதல்வர் கருணாநிதி கூறவில்லை. ஆனால் கள்ளால் எந்த நோயும் பரவாமல் தடுப்பது அவசியம் என அவர் கருதுகிறார்.
மேலும் கள் இறக்க அனுமதித்தால் அதை எவ்வாறு முறைப்படுத்தி செயல்படுத்துவது என்பது பற்றியும் ஆராய வேண்டியுள்ளது என தெரிவித்தார்.
இது தொடர்பாக ஆராயவே நீதிபதி சிவசுப்பிரமணியன் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், அந்தக் குழுவின் அறிக்கை வரும் வரை பொறுமையாக இருக்குமாறும் அவர் கூறினார்.
எங்களது அனைத்து கோரிக்கைகள் குறித்தும் நிச்சயம் பரிசீலிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் என்பது வெறுமனே தேர்தலை மட்டுமே மனதில் கொண்டு செயல்படும் கட்சி அல்ல. யார் ஆட்சியில் இருந்தாலும் கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்கான பல திட்டங்களை செயல்படுத்த வைப்பதே எங்கள் நோக்கம்.
அந்த அடிப்படையிலேயே இப்போது முதல்வர் கருணாநிதியை சந்தித்து, கொங்கு மண்டல வளர்ச்சிக்கான சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தும்படி வலியுறுத்தி உள்ளோம் என்றார் ராமசாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications