சங்கரராமன் கொலை வழக்கு-விசாரணை ஒத்திவைப்பு
புதுச்சேரி : காஞ்சி வரதராஜர் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் விசாரணை வரும் ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளராக இருந்த சங்கரராமன் கடந்த 2004, செப்டம்பர் 3ம் தேதி அன்று கோயிலில் வைத்து மர்ம கும்பலால் வெட்டிப் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, விஜேந்திர சரஸ்வதி உள்பட 24 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை தற்போது புதுச்சேரி மாவட்ட தலைமை குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று சாட்சிகள் விசாரணமை தலைமை நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றம்சாட்டப்பட்ட சுந்தரேச அய்யர், ரகு, அப்பு, கதிரவன் உள்பட 10 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். ஆனால், ஜெயந்திரர், விஜேந்திரர் உட்பட 13 பேர் நீதி மன்றத்தில் ஆஜராகவில்லை.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications