பணத்தால் வெல்வதை விட தோற்றுப் போவது மேல் -வைகோ
மதுரை: ஓட்டுகளுக்கு பணம் கொடுத்து வாங்குவது பற்றி நான் சிந்திப்பது இல்லை. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. அந்த வெற்றியை விட தோல்வியே மேல் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதுரை ஒத்தக்கடையில் மதிமுக நிர்வாகிகள் பொதுக் குழு கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
ஈழத் தமிழர்கள், சிங்கள ராணுவ வீரர்களால் தோற்கடிக்கப்படவில்லை. இந்திய அரசின் துரோகத்தால், தோற்கடிக்கப் பட்டுள்ளனர். அது தான் உண்மை.
இந்திய அரசு, சிங்கள அரசோடு சதி செய்து, யுத்தம் நடத்தியது. விடுதலை புலிகளுக்கு எந்த பொருட்களும் போக விடாமல் தடுத்து, இலங்கைக்கு ஆயுதங்களையும் கூடவே வழங்கியது.
தமிழகத்தில் மதிமுகவை எப்படியாவது அழித்து விட வேண்டும் என சிலர் முயற்சி செய்கின்றனர். அது எந்த காலத்திலும் நடக்காது.
தமிழக அரசு செய்த துரோகங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வேன். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பணம் கொடுத்து தான் திமுகவினரும், காங்கிரசாரும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆயுதத்தை ஆயுதத்தால் தான் வெல்ல வேண்டும் என்று கூறினார்கள். ஓட்டுகளுக்கு பணம் கொடுத்து வாங்குவது பற்றி நான் சிந்திப்பது இல்லை. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. அந்த வெற்றியை விட தோல்வியே மேல் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications