பன்சாலுக்கு கூடுதல் பொறுப்பு-அமைச்சரவையில் சிறிய மாற்றம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் லேசான மாற்றங்களை செய்துள்ளார். சபாநாயகர் மீரா குமாரின் நீர் வளத்துறை அமைச்சர் பொறுப்பு பவன்குமார் பன்சாலுக்கு கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 22ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் 19 அமைச்சர்களுடன் பிரதமராக அமர்ந்தார். இதை தொடர்ந்து 28ம் தேதி மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்றனர். இதையடுத்து அமைச்சர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் சபாநாயகராக நீர் வளத்துறை அமைச்சராக இருந்த மீரா குமாரை நியமித்தது. இதையடுத்து அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அப்பதவி தனக்கு கேபினட் அமைச்சரவை கொடுக்கவில்லை என கோபத்தில் இருந்த ஒரிசா காங்கிரஸ் எம்.பி. ஸ்ரீகாந்த் ஜெனாவுக்கு கொடுக்கப்படும் என கருதப்பட்டது.
ஆனால், தற்போது அது நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சாலுக்கு கொடுக்கப்ட்டது. காங்கிரசை சேர்ந்த பவன் குமார் பன்சால் பஞ்சாப் மாநிலம் சண்டிகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு்ள்ளார். இதையடுத்து தற்போது மத்திய அமைச்சரவையின் எண்ணிக்கை 78 ஆக குறைந்துள்ளது.
மேலும் கனரக தொழிற்சாலை இணை அமைச்சர் பிரதீக் பிரகாஷ்பாபு பாட்டீல் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார துறை இணை அமைச்சர் அருண் யாதவ் ஆகியோரின் இலாக்காக்கள் இருவருக்கும் இடையே மாற்றப்பட்டன.
இது குறித்து ஜனாதிபதி பிரதிபா பாட்டீலிடம் கலந்து பேசி பிரதமர் முடிவெடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications