புலிகளின் நவீன நீர்மூழ்கி பிடிபட்டது!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வந்த நீர்மூழ்கிக் கப்பல் பிடிபட்டுள்ளதாக இலங்கை ராணுவம் கூறியுள்ளது.
7.2 மீட்டர் நீளம், 4 மீட்டர் உயரம் கொண்ட இந்த நீர்மூழ்கி முல்லைத் தீவுக்கு அருகே வெள்ளைமுள்ளி வாய்க்கால் பகுதியி்ல் கடலோரத்தில் இந்த நீர்மூழ்கி பிடிபட்டுள்ளதாக ராணுவம் வெளியிட்ட அறிக்கையி்ல் கூறப்பட்டுள்ளது.
இந்த நீ்ர்மூழ்கியை புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் பயன்படுத்தி வந்ததாகவும், இதற்கு முன் புலிகளின் பல நீர்மூழ்கிகள் பிடிபட்டாலும் இப்போது பிடிபட்டுள்ள நீர்மூழ்கி தான் மிக நவீனமானது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் பகுதியில் பெருமளவிலான ஆயுதங்கள் பிடிபட்டுள்ளதாக ராணுவம் கூறியுள்ளது. இதில் கண்ணிவெடிகள், ஆட்டோமேடிக் ரைபி்ள்கள் ஆகியவையும் அடங்கும்.













Click it and Unblock the Notifications