மீண்டும் பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்த திட்டம்!
டெல்லி: மீண்டும் பெட்ரோல்-டீஸல் விலையை உயர்த்தும் திட்டத்தில் உள்ளது மத்திய அரசு. வருகிற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்பதை சூசகமாக நேற்று தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.
இந்த நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் குறித்து நேற்று பிரதமர் மன்மோகன் சிங் கலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது.
இந்தக் கூட்டத்துக்குப் பின், பிரணாப் முகர்ஜியை பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா சந்தித்துப் பேசினார்.
கச்சா எண்ணெயின் விலை 70 டாலர்களைத் தாண்டிவிட்டது குறித்தும், இதனால் உயர்த்தப்பட வேண்டிய விலைகள் குறித்தும் இருவரும் ஆலோசனை செய்ததாகத் தெரிகிறது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முரளி தியோரா, "கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கு தற்போது பதிலளிக்க முடியாது. இருந்தாலும், பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டிய அவசியம் வந்து விட்டது..." என்றார்.
பின்னர் நிதியமைச்சரைச் சந்தித்த செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டபோது, "கச்சா எண்ணெய் விலை உயர்வை சமாளிக்க என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து பட்ஜெட்டின் போது முடிவு செய்யப்படும். இதற்கான கால அவகாசம் எதையும் தெரிவிக்க முடியாது. பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்வது பற்றியும் அப்போது முடிவு செய்யப்படும்..." என்றார்.
பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று பட்ஜெட் கூட்டத் தொடரின் போது அறிவித்துவிட்டால், அடுத்த கணமே, சர்வதேச சந்தையில் நிலவும் விலைக்கேற்ப இந்தியாவிலும் பெட்ரோல் விற்பனை அமையும். இப்போதுள்ள விலையைவிட ரூ.5 கூடுதலாக விலை வைக்கும் சூழல் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications