போரினால் 1 லட்சம் பேர் பலி-மறுவாழ்வுப் பணி பெரும் சவால்: இலங்கை
கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொடும் போரில் 1 லட்சம் அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர் என்று அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான மறு வாழ்வு மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மறு சீரமைப்பு பணிகள் கடும் சவாலாக உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
மியான்மர் சென்றுள்ள ராஜபக்சே அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போதைய பெரும் சவாலான பணி, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைப்பதும், அங்கு மக்களை குடியமர்த்தும் மறு வாழ்வுப் பணிகளும்தான்.
மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டு வர வேண்டிய மிகப் பெரிய பணி காத்துள்ளது.
30 வருடமாக நடந்த மிகப் பெரிய கொடும் போரில் 1 லட்சம் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.
தீவிரவாதத்திற்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடித்த திருப்தி எங்களிடம் உள்ளது.
சமத்துவத்துடனும், நல்லிணக்கத்துடனும், புத்த மதத்தின் போதனைகளையொட்டிய சுதந்திரமான, சுயேச்சையான சமுதாயத்தை உருவாக்க முடிந்திருக்கிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications