தமிழகத்தில் 200 பள்ளிகளில் ரூ. 2 கோடியில் கணக்கு லேப்
சென்னை: வேதியியல், இயற்பியல் லேப் வரிசையில் தமிழக பள்ளிகளில் கணக்கு லேப் துவக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 200 பள்ளிகளில் ரூ. 2 கோடி செலவில் இவை அமைக்கப்படும் என பள்ளிகல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கணக்கு என்றாலே பாதி பள்ளிக்கூட மாணவர்களுக்கு பிணக்கு தான். கணக்கு பரீட்சை முடிப்பதற்குள் அவர்களுக்கு கதி கலங்கிவடும். இதற்கு கணிதத்தின் மீதிருக்கும் ஆர்வம் மாணவர்களிடம் குறைந்துவிடுவது தான் முக்கிய காரணம்.
இதற்கு ஆசிரியர்கள் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் சொல்லி தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் சில இடங்களில் எழுந்து வருகிறது. இந்நிலையில் கணித பிரச்சனைக்கு தீர்வு காண தமிழக பள்ளி கல்வி அமைச்சகம் புதிய முடிவை எடுத்துள்ளது.
அது கணக்கு லேப் திட்டம். இந்த கணக்கு லேப்பில் மாணவர்களின் கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் பாடங்கள் சம்பந்தப்பட்ட மாதிரிகள் இடம்பெறும். மேலும், கணக்கு தொடர்பான எளிய உபகரணங்கள், வரைபடங்கள் ஆகியவை இருக்கும்.
இந்த லேப்பில் சுமார் ஆறு முதல் 9ம் வகுப்பு பாட திட்டத்தில் இருக்கும் 276 கருத்துக்களை 61 மாடல்கள் மூலம் விளக்கப்படும். இந்த மாடல்களை உருவாக்குவதில் ராமானுஜம் அருங்காட்சியகம் மற்றும் கணக்கு கல்வி மையம் உதவியுள்ளது.
இந்நிலையில் நேற்று பள்ளி கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் கணக்கு லேப்பை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,
சமீபத்தில் உடுமலைப்பேட்டை அருகே அமராவதியில் உள்ள சைனிக் ராணுவ பள்ளிக்கு சென்றிருந்தேன். அங்கு கணித பாடத்துக்கு லேப் இருப்பதை பார்த்தேன். இதையடுத்து அந்த தி்ட்டத்தை தமிழக பள்ளிகளிலும் கொண்டு வரும் முயற்சியை ஆரம்பித்துள்ளோம்.
பள்ளிகளில் இருக்கும் வகுப்பறை சூழ்நிலைகள் மாணவர்கள் ஈர்க்க வேண்டும் என்பதே முதல்வர் கருணாநிதியின் விருப்பம். மாணவர்கள் கணக்கு பாடத்தை படிக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனால் அவர்களுக்கு மனஅழுத்தம் உண்டாகுகிறது.
இதையடுத்து மாணவர்கள் கணிதத்தை எளிமையாக புரிந்துகொள்ள கணக்கு லேப் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பள்ளியிலிருந்து வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்.
இந்த திட்டம் விரைவில் 200 அரசு உயர்நிலை பள்ளியில் அமைக்கப்படும். இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கு ரூ. 1 லட்சம் விதம் ரூ. 2 கோடி செலவழிக்கப்படும்.
இந்த திட்டம் பின்னர் அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு விரிவு செய்யப்படும். இது தொடர்பாக 400 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் மூலம் மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படும். ஆசிரியர் பயிற்சி கூடங்களிலும் இது போன்ற லேப்கள் துவக்கப்படும்.
புதிய ஆசிரியர் நியமனங்கள் தொடர்பாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்படும். ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தை விரைவில் துவக்கவும் ஏற்பாடு செய்து வருகிறோம் என்றார் தங்கம் தென்னரசு.
கணக்கு லேப் குறித்து அப்பள்ளியின் கணக்கு ஆசிரியை ஆரோக்யமேரி கூறுகையில், கணக்கு லேப் ஆரம்பிப்பதற்காக வந்த உபகரணங்களை பார்த்தும் எங்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இதுவரை மாணவர்களுக்கு கணக்கு சொல்லி கொடுப்பது கடிமான இருந்தது.
அதற்கு ஜீயோமெட்ரி பாக்ஸ் ஒன்று தான் துணையாக இருந்தது. தற்போது லேப்பில் இருக்கும் பொருட்களை கொண்டு மாணவர்களுக்கு சொல்லி தர ஆர்வமாக இருக்கிறோம் என்றார்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications