காறித் துப்பும் கரடி.. தாயத்து.. அமோக விற்பனை!

Subscribe to Oneindia Tamil

திசையன்விளை: கன்னியாகுமரி மாவட்டம் திசையன்விளை மற்றும் குலசேகரபட்டிணம் பகுதிகளில் ஒரு ஆந்திரக் கும்பல் முகாமிட்டு, கரடி முடி தாயத்தை படு சூடாக விற்று வருகிறது.

ஆந்திராவை சேர்ந்த இந்தக் குழுவினர் ஆங்கங்கே முகாமிட்டு தாங்கள் இழுத்து வரும் கரடியுடன் பல்வேறு குழுக்களாக பிரிந்து கரடி முடியை தாயத்திற்குள் அடைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள்.

கரடி முடியை தாயத்தாக அணிந்து கொண்டால் தோஷம், கண்திருஷ்டி, நீங்கி விடும் என்று 'கரடி' விட்டு ஒரு தாயத்தை 10 ரூபாய்க்கு விற்கிறார்கள். முதலில் அவர்கள் ஏற்கனவே மூடி அடைக்கப்பட்டதாக கூறப்படும் கயிறுடன் கட்டப்பட்ட தாயத்தை கரடியின் வாயில் கொடுக்க அதில் கரடி 'தூ' என்று வேகமாக துப்புகிறது.

அதை வாங்கி கொண்டு கரடிக்கு கும்பிடு போட்டு விட்டு பணத்தை கொடுத்து விட்டு மக்கள் வாங்கி செல்கின்றனர்.

ஆனால் தாயத்திற்குள் கரடி முடி இருக்கிறதா என்று கேட்டால் அது சஸ்பென்ஸ்.

இதுகுறித்து கரடி முடி தாயத்து விற்பனை செய்யும் முகேஷ் கூறுகையில், 3 வயதுடைய இந்த கரடி குட்டியை சிறு குட்டியாக இருக்கும்போதே எடுத்து வளர்த்து வருகிறேன். மனிதன் உட்கொள்ளும் அனைத்து உணவுகளையும் அது சாப்பிடும்.

வயிற்று பிழைப்புக்காக கரடியுடன் சுற்றித் திரிகிறேன். ஆனால் போதிய வருமானம்தான் கிடைக்கவில்லை என்று ரெம்ப பீலிங்காக கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+