போர் ஓய்ந்தும் தமிழ்ப் பெண்கள் தொடர்ந்து கற்பழிப்பு - அகதிகள்
ராமேஸ்வரம்: விடுதலைப் புலிகளுடனான போர் ஓய்ந்த பிறகும் கூட தமிழர்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. தமிழ்ப் பெண்கள் தொடர்ந்து சரமாரியாக கற்பழிக்கப்படுகின்றனர் என்று இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் வந்த அகதிகள் குமுறலுடன் கூறியுள்ளனர்.
இலங்கையில் போர் முடிந்தாலும் கூட ராணுவத்தினரின் அட்டகாசம் இன்னும் ஓயவில்லை என்பதால் தொடர்ந்து அகதிகள் வந்தவண்ணம் உள்ளனர்.
நேற்று தனுஷ்கோடி அருகே உள்ள 3வது மணல் திட்டில் சில அகதிகள் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து கடற்படைக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடற்படையினர் அங்கு விரைந்தனர்.
திட்டில் தவித்துக் கொண்டிருந்த 3 ஆண்கள், 2 பெண்களை ரோந்துப் படகில் ஏற்றி ராமேஸ்வரத்தில் உள்ள முகாமுக்குக் கொண்டு வந்தனர்.
அவர்களுக்கு சாப்பாடு கொடுத்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் மட்டக்களப்பைச் சேர்ந்த மோகன சுந்தரம், மனைவி துஷ்யந்தி, வவுனியாவைச் சேர்ந்த பேரின்பம், மனைவி திரேசாள் ரோஸ் என்று தெரிய வந்தது.
இன்னொருவரின் பெயர் கமலதாசன். இவர் ராமேஸ்வரத்திலிருந்து பேசாலைக்குச் சென்றவர்.
இவர்களில் மோகன சுந்தரம் கருணாவின் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவராம். ஆனால் தற்போது அதில் தான் இல்லை என்று கூறியுள்ளார் மோகன சுந்தரம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் கடந்த 96-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை விடுதலைப்புலிகளின் கருணா படைப் பிரிவில் முக்கிய பொறுப்பில் இருந்தேன்.
2004-ம் ஆண்டு எனக்கு திருமணமான நிலையில் கருணா படையில் இருந்து விலகி மனைவியுடன் மட்டக்களப்பு பகுதியில் வசித்து வந்தேன்.
தற்போது போர் ஓய்ந்து விட்டாலும் இலங்கை ராணுவத்தினர் வெள்ளை நிற வேன்களில் வந்து இளம்பெண்களை கடத்திச்சென்று கற்பழிப்பதும், இளைஞர்களை கடத்திச் சென்று துன்புறுத்துவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனால் உயிருக்கு பயந்து நானும், எனது மனைவியும் இங்கு தப்பி வந்து விட்டோம்.
கடந்த 15-ந் தேதி தலா ரூ.25 ஆயிரம் வீதம் கொடுத்து மன்னாரில் இருந்து புறப்பட்டு வந்தோம். 16-ந் தேதி அதிகாலை 3 மணி அளவில் கடல் பகுதியில் உள்ள மணல் திட்டில் இறக்கிவிட்டு விட்டு சென்று விட்டனர். காலையில் விடிந்த பிறகு தான் எங்களை இறக்கி விட்ட இடம் நடுக்கடல் என்பது தெரியவந்தது.
16ம் தேதி முழுவதும் தவித்தோம். வழக்கத்தை விட கடல் பகுதியில் கொந்தளிப்பு அதிகமாக இருந்ததுடன் காற்றும் அதிகம் வீசியது. நாங்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நின்றபடி தத்தளித்தோம்.
தொடர்ந்து தண்ணீர் பெருகியதால் நாங்கள் கடலில் மூழ்கி இறந்து விடுவோம் என்று கருதினோம். நேற்று காலை தேங்கிய தண்ணீர் வடிந்தது. அப்போது தான் இந்திய கடற்படையினர் வந்து மீட்டனர் என்றார்.
பின்னர் ஐவரையும் போலீஸில் ஒப்படைத்தனர் கடற்படையினர்.
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications