யுஎஸ்-குட்டி விமானம் ஆற்றில் விழுந்து 3 இந்தியர் பலி
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மூன்று இந்தியர்கள் சென்ற குட்டி விமானம் ஒன்று ஆற்றில் தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் மூவரும் பலியானார்கள்.
கேரளாவை சேர்ந்தவர் ஜார்ஜ் மதாய் கொலத். இவர் 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க சென்று குடியேறினார். கடுமையாக உழைத்த அவர் ரூ. 20 கோடி மதிப்புள்ள கேசில் என்ற ஆடம்பர ஹோட்டலை நடத்தி வந்தார். சொந்தமாக குட்டி விமானம் ஒன்று வைத்திருந்தார்.
தற்போது 41 வயதான அவருக்கு 1 மனைவியும், 6 குழந்தைகளும் உள்ளன. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மதியம் அவர் தனது மகன் ஜார்ஜ் கொலத் (11) மற்றும் டாக்டர் நண்பர் கிருஷ்ணன் ராகவன் (52) ஆகியோருடன் நியூயார்க் நகரில் இருந்து சுற்றுலா கிளம்பினார்.
பயணம் செய்த சிறிது நேரத்தில் மதாய் கொலத் உள்ளிட்டோர் மோஹாக் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள உணவு விடுதிக்கு சென்று சாப்பிட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.
அப்போது அவர்கள் சென்ற விமானம் மோஹாக் ஆற்றுக்கு மேலாக சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுபாட்டை இழந்து, தலைகுப்புற ஆற்றுக்குள் விழுந்தது. இதில் மூவரும் பலியானார்கள்.
அல்பெனி நகரில் 25 கிமீ., தூரத்தில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மீட்புகுழுவினர் விரைந்து செயல்பட்டு நேற்று முன்தினம் சிறுவன் ஜார்ஜ் கொலத் மற்றும் கிருஷ்ணன் ராகவன் ஆகியோரின் உடல்களை மீட்டனர். நேற்று மதாய் கொலத்தின் உடல் மீட்கப்பட்டது.
இது குறித்து மதாய் கொலத்தின் மைத்துனர் அனில் பவுலோஸ் கூறுகையில், அவர் கொலத் குரூப் ஆப் ஹோட்டல்களை நடத்தி வந்தார். திறமையானவர். எப்போது உற்சாகமாக இருப்பார். அவர் மறைந்ததை என்னால் நம்ப முடியவில்லை என்றார்.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications