திருச்சி: காரில் இருந்த ரூ.50 லட்சம் மாயம்
திருச்சி: திருச்சியில் காருக்குள் வைத்திருந்த 50 லட்ச ரூபாய் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் அயிலூத்து பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜன் (37). ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்.
இவர், சமீபத்தில் 20 ஏக்கர் நிலத்தை 50 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். வங்கியில் செலுத்தியிருந்த 50 லட்சத்தை நேற்று முன்தினம் எடுத்த மகாராஜன், அதை சூட்கேசில் வைத்து சென்னைக்கு எடுத்துச் செல்ல கொண்டு சென்றார்.
இவர் பயணித்த இன்னோவா காரை அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் தங்கவேல் ஓட்டினார்.
பணத்துடன் செல்ல வேண்டியிருந்ததால் வக்கீல் மதன்குமார், நண்பர் முத்துக்குமாரை அழைத்துக் கொண்டு மகாராஜன் புறப்பட்டார்.
இந்த நிலையில், துவரங்குறிச்சியை அடுத்த கோவில்பட்டி என்னுமிடத்தில் காரை நிறுத்திய மகாராஜன், நண்பர்களுடன் அங்குள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தியுள்ளார். அதன் பின்பு, காரில் புறப்பட்ட அனைவரும், திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்டில் உள்ள ராஜா ஓட்டலில் அசைவ உணவு சாப்பிடச் சென்றனர்.
அப்போது காரை பூட்டிய டிரைவர் தங்கவேலிடம் இருந்து கார் சாவியை மகாராஜன் வாங்கிக் கொண்டதாகவும், அனைவரும் சாப்பிட்ட பின் பில் தொகை கொடுப்பதற்காக
சாவியை கொடுத்து காரில் இருந்து பணம் எடுத்து வருமாறு கூறியதாக கூறப்படுகின்றது.
காருக்கு சென்ற டிரைவர் தங்கவேல், காரை திறந்த போது அதில் இருந்த சூட்கேஸ் மாயமானது குறித்து மகாராஜனிடம் கூறியுள்ளார். கார் திறக்கப்படாத நிலையில் பணம் மாயமானது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
இது குறித்து கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசில் மகாராஜன் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் முதற்கட்டமாக டிரைவர் தங்கவேலிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் தகவல் ஏதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications