1 லட்சம் தொழிலாளர்களை திருப்பி அனுப்பும் குவைத்!
குவைத்: ஏஜென்டுகளை நம்பி முறைகேடாக தங்கள் நாட்டுக்கு வந்துவிட்ட 1 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் திருப்பி அனுப்புகிறது குவைத் அரசு.
குவைத்தில் மொத்தம் 5 லட்சத்து 80 ஆயிரம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களில் பலருக்கு முறையான விசா கிடையாது.
சொந்தமாக நிறுவனம், கடை அல்லது சிறிய அளவில்கூட வர்த்தக நிறுவனம் இல்லாத மோசடிக்காரர்கள் சிலர், பணம் பறிக்க போலியான வேலை அனுமதிக் கடிதத்தைக் கொடுத்து தொழிலாளர்களை ஏமாற்றி குவைத்துக்கு வரவைக்கிறார்கள்.
ஆனால் வந்தபிறகு அவர்களுக்கு சொன்னபடி வேலை தராமல் மிக மோசமாக நடித்துவதும், ஒட்டகப் பராமரிப்பு, ஓட்டல்களில் கிடைத்த வேலையைச் செய்து சரியான வருமானமில்லாமல் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
இப்படி தொழிலாளர்களை வரவழைக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப் போவதாக குவைத் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அமைச்சர் பாதில் சபர் கூறுகையில், முறைகேடான வழியில் குவைத்துக்கு வந்துள்ளவர்களில் 1 லட்சம் பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப் போகிறோம்.
மேலும் இப்படி மோசடியாக அவர்களை குவைத்துக்கு வரவழைத்த நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications