தர்மபுரி அருகே பல லட்சம் மோசடி-ஒருவர் கைது
தர்மபுரி: தர்மபுரி அருகே தொழிலாளர்களுக்கு கடன் வாங்கித் தருவதாக கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் சோளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (45). இவர் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வாங்கித் தரும் புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளார்.
இதனால் இவருக்கு மாவட்டம் முழுக்க உள்ள தொழிலாளர்களிடம் நல்ல அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
இதைப் பயன்படுத்தி தொழிலாளர்களிடம் வங்கியில் கடன் வாங்கித் தருவதாக கூறி பாப்பாரப்பட்டி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் வசூல் செய்துள்ளார்.
இதே போன்று, சுமார் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் ரூ. 30 லட்சத்துக்கும் மேல் வசூலித்ததாகத் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் ஓராண்டுக்கு மேல் ஆகியும் முருகேசன் சொன்னபடி கடனைப் பெற்றுத் தரவில்லை.
இதனால், பணம் கொடுத்த தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் ஆவேசம் அடைந்து பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனையறிந்த முருகேசன்
திடீரென தலைமறைவானார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தர்மபுரி எஸ்.பி. சுதாகரிடம் இதுகுறித்து புகார் அளித்தனர்.
இது குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க பாப்பாரப்பட்டி போலீசாருக்கு எஸ்.பி. உத்தரட்டார்.
அதன் பேரில் தனிப்படை அமைத்த போலீசார் முருகேசனை தேடி வந்தனர். அப்போது, முருகேசன் தனது வீட்டுக்கு வந்த போது அங்கு ரகசிய கண்காணிப்பில் இருந்த போலீசார் அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
பின்பு, பாப்பாரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications