ஏர் பிரான்ஸ் விபத்து: 11 பயணிகளின் அடையாளம் கண்டுபிடிப்பு-கருப்புப் பெட்டி சிக்கவில்லை
ரியோ டி ஜெனிரா: அட்லான்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் பிரான்ஸ் விமானத்தில் பயணித்து உயிரிழந்தவர்களில் இதுவரை 11 பேரின் அடையாளம் மட்டுமே தெரிந்துள்ளது. கருப்புப் பெட்டியும் இன்னும் கிடைக்காததால் அதிகாரிகள் டென்ஷனாக உள்ளனர்.
கடந்த 1ம் தேதி பிரேசிலின் ரியோ நகரிலிருந்து பாரீஸ் புறப்பட்டது ஏர் பிரான்ஸ் விமானம். அட்லான்டிக் கடல் மீது விமானம் பறந்தபோது விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்தது.
இதில் விமானத்தில் பயணம் செய்த 228 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது கடல் பகுதியில் தொடர்ந்து உடல்களைத் தேடும் பணி நடந்து வருகிறது.
இதுவரை 50 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. விமானத்தின் சிதறிய பாகங்கள் சிலவும் சிக்கியுள்ளன. இந்த உடல்கள் அனைத்தும் பிரேசில் கொண்டு செல்லப்பட்டன.
அங்கு இதுவரை 11 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது.
மற்ற உடல்கள் அனைத்தும் அடையாளம் காண முடியாத அளவுக்கு அழுகிப் போய் விட்டன.
இதற்கிடையே, விமானத்தின் கருப்புப் பெட்டி இன்னும் கிடைக்கவில்லை. அதைத் தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. கருப்புப் பெட்டி கிடைத்தால்தான் விமானம் எப்படி விபத்துக்குள்ளானது, கடைசி நேரத்தில் நடந்தது என்ன என்பது தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்து. இது கிடைக்காவிட்டால் விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பதை அறியவே முடியாமல் போகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு முதல் கட்டமாக தலா ரூ. 12 லட்சம் நஷ்ட ஈடு வழங்கப்படும் என ஏர் பிரான்ஸ் அறிவித்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications