தென் மாநிலங்களில் வான் வழி தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டம்!

'ரா' மற்றும் 'ஐ.பி' ஆகியவை மத்திய உள்துறையிடம் கொடுத்துள்ள எச்சரிக்கை ரிப்போர்ட்டில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மும்பையில் யாரும் எதிர்பாராத வகையில் கடல் வழியே வந்து தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் இப்போது வான்வெளித் தாக்குதலுக்குத் திட்டமிட்டுள்ளதாகவும், குறிப்பாக தென் மாநிலங்களுக்கு குறி வைத்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத அமைப்பினரின் வயர்லெஸ் தொடர்புகளை உளவு அமைப்பான இன்டெலிஜென்ஸ் பீரோ இடைமறித்துக் கேட்டபோது இந்தத் தகவல்கள் கிடைத்தன.
லஷ்கர் அமைப்பின் தொலைத்தொடர்புப் பிரிவின் தலைவரான சகார் ஷா, தென் மாநிலங்களில் இயக்கப்படும் தனியார் விமான, ஹெலிகாப்டர் சர்வீஸ்கள் குறித்த தகவல்களைத் திரட்ட ஆரம்பித்துள்ளார். விமானங்கள், ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுத்து அவற்றைக் கொண்டு பயங்கர தற்கொலைத் தாக்குதலை நடத்த அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக தென் மாநில விமான நிலையங்கள், அணு மின் நிலையங்கள், இந்தியாவின் விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விராட் (இது பெரும்பாலும் விசாகபட்டிணம், கொச்சி, சென்னை, மும்பை பகுதியை ஒட்டிய கடல் பகுதியில் நிறுத்தப்படுவது வழக்கம்), விசாகபட்டிணம் கடற்படைத் தளம், கொச்சி துறைமுகம் ஆகியவை குறி வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து நாடு முழுவதும் உள்ள விமான நிறுவனங்கள், ஹெலிகாப்டர் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதி்ல், சந்தேகத்துக்குரிய நபர்கள் விமானங்கள், ஹெலிகாப்டர்களை வாடக்கைக்கு கேட்டு வந்தால் உடனடியாக உள்துறைக்கு தகவல் தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications