ரூ. 1 லட்சம் கள்ள நோட்டு-அதிர்ந்த ரிசர்வ் வங்கி
சென்னை: சென்னை டாஸ்மாக் மதுக் கடையில் வசூலான பணத்தில் ரூ. 1 லட்சம் அளவுக்கு கள்ள நோட்டுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெரியமேடு டாஸ்மாக் கடைக்கு சில நாட்களுக்கு முன்பு முகம்மது அம்ருதீன் என்பவர் வந்தார். ஜார்க்கண்டைச் சேர்ந்த அவர் ரூ. 1 லட்சம் பணத்தைக் கொடுத்து சரக்கு வாங்கினார்.
இவ்வளவு பெரிய தொகையை கொடுக்கிறாரே என்ற சந்தேகத்தில் போலீஸாருக்குத் தகவல் போனது. அவர் கொடுத்தது கள்ள நோட்டாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.
ஆனால் வங்கியில் இந்தப் பணத்தைக் காட்டிய போலீஸார், அத்தனையும் நல்ல நோட்டுத்தான் என்று கூறியதைத் தொடர்ந்து கடைக்காரர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு சரக்கைக் கொடுத்து அனுப்பினர்.
ஆனால் தற்போது இந்தப் பணம் பக்கா கள்ள நோட்டு என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடையாளமே காண முடியாத அளவுக்கு இந்த கள்ள நோட்டுக்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்த கள்ள நோட்டு விவகாரம் குறித்து சிபிசிஐடிக்கு விசாரணை மாற்றப்படவுள்ளது. இந்த கள்ள நோட்டுக்களை அச்சடித்தது யார், எங்கு அச்சடிக்கப்பட்டது என்பது குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரிக்கவுள்ளனர்.
-
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக எம்எல்ஏ வென்ற விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் புதிய வழக்கு -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
சென்னை வாடகைதாரர்கள் கவனத்திற்கு! 2026 புதிய வாடகை சட்டத்தில் மாற போகும் அந்த 5 முக்கிய விதிகள் என்ன -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு












Click it and Unblock the Notifications