நான் விலகினாலும் கட்சி நடக்கணும்-சிரஞ்சீவி
ஹைதராபாத்: பிரஜா ராஜ்யம் கட்சியிலிருந்து யார் விலகினாலும் கவலையில்லை. கட்சி தானாக நடக்கும். நானே விலகினாலும்கூட கட்சி நடக்கணும் என்கிறார் நடிகர் சிரஞ்சீவி.
மேலும் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளத் தயார் என அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று காலை ஹைதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் கட்சி தொடங்க காரணமாக இருந்தவர் டாக்டர் மித்ரா. அவர் இப்போது பிரஜா ராஜ்யம் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
சில சொந்த காரணங்களுக்காக அவர் காரணங்களுக்காக கட்சியில் இருந்து விலகி இருப்பார். இது கட்சிக்கு இழப்பு என்று சொல்ல முடியாது. நானே கட்சியில் இருந்து விலகினாலும் கட்சி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.
இந்தக் கட்சிக்கு யாரும் வரலாம்... போகலாம்.
நான் தெலுங்கு தேசம் கட்சியுடன் ஒரு போதும் கூட்டணி வைக்க மாட்டேன். வருகிற உள்ளாட்சி மன்ற தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி வைக்கத் தயார்.
ஆகஸ்டு 26-ந்தேதியுடன் கட்சி தொடங்கி 1 வருடம் ஆகப்போகிறது. இதை சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளோம். முதல் ஆண்டிலேயே பிரஜா ராஜ்யத்துக்கு மக்கள் தந்துள்ள ஆதரவு மகத்தானது.
மாவோயிஸ்ட் இயக்கத்துக்கு தடை விதிக்கும் மத்திய அரசின் முடிவை நான் எதிர்க்கிறேன். இதை தீவிரவாதமாகப் பார்க்காமல் சமூகப் பிரச்சினையாக ஆட்சியாளர்கள் பார்க்க வேண்டும்... " என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications