தா.பாண்டியன் குறித்து உளவுத்துறை வதந்தி?

தா. பாண்டியன் மீது சிலர் தாக்குதல் நடத்தியதாகவும், அவரது வீடும் தாக்கப்பட்டதாகவும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று வதந்தி பரவியது.
இதைத் தொடர்ந்து சென்னையிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு ஏராளமானோர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர்.
இந்நிலையில் அக்கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. அதில் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா, தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் நல்லகண்ணு, மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், துணைச் செயலாளர்கள் மகேந்திரன், பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக் கூட்டத்தில் வதந்தியைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் மீது அரசியல் உள்நோக்கம் கொண்ட அவதூறான பொய் வழக்குகள் அண்மைக் காலமாக புனையப்பட்டு வருகின்றன.
இப்போது அவர் குறித்த பல வதந்திகளை உளவுத் துறையினர் திட்டமிட்டு பரப்பி வருவதாகத் தெரிகிறது.
இந்த வதந்திகள் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உரிய முன்னோட்டமாக இருக்கக்கூடும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.
எனவே இந்தப் பிரச்சனை குறித்து முதல்வர் கருணாநிதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications