3 பேர் கொலை வழக்கில் வாலிபருக்கு 72 ஆண்டு, 5 பேருக்கு 62 ஆண்டு சிறை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு 72 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதே வழக்கில் 5 பேருக்கு தலா 62 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள மீளவிட்டான் கக்கன்நகரைச் சேர்ந்தவர் மாயாஜான் (வயது 32). அவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சித்ரா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
இதுதொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 2003ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதியன்று மாயாஜான் அவரது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த ஆத்தூரைச் சேர்ந்த சோமசுந்தரம் (37), தண்டுபத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டி (27), கொழுவைநல்லூரைச் சேர்ந்த சங்கர், ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்த முருகன் என்ற வேல்முருகன் (26), முத்துராமன் (20), முத்துராஜ் (20) ஆகிய 6 பேர் சேர்ந்து மாயாஜானை வெட்டிக் கொன்றனர்.
பின்னர் மாயாஜானின் வீட்டுக்கு சென்ற அக்கும்பல் அங்கிருந்த அவரது அண்ணன் அந்தோணி, அந்தோணியின் மகன் திணேஷ் (10 வயது) ஆகியோரையும் துடிக்கத் துடிக்க வெட்டிக் கொன்றனர்.
இது குறித்து தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி 2வது விரைவு நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பை அளித்தது.
நீதிபதி எஸ்.சாத்தப்பிள்ளை அளித்த தீர்ப்பில், சோமு என்ற சோமசுந்தரத்துக்கு கொலை, கொலைமுயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் 3 ஆயுள் தண்டனை உள்பட 72 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார். கூடவே ரூ.6,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
சுந்தரபாண்டி, சங்கர், முருகன் என்ற வேல்முருகன், முத்துராமன், முத்துராஜ் ஆகிய 5 பேருக்கும் கொலை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் 3 ஆயுள்தண்டனை உள்பட 62 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்தார்.
இந்தத் தண்டனைக் காலத்தை அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் எனவும் அந்த பரபரப்பு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications