ஓடும் ரயிலில் பெண்ணுக்கு குவா... குவா...!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்து கொண்டிருந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு ஓடும் ரயிலில் பெண் குழந்தை பிறந்தது.

கமுதி பெரமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (30). இவர் லாரி டிரைவராக உள்ளார். இவரது மனைவி முத்துமாரி (23). இவர்களுக்கு இரண்டரை வயதில் சீதாலட்சுமி என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், முத்துமாரி இரண்டாவது முறையாக கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான முத்துமாரி சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு நேற்று முன்தினம் மாலை தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் முன் பதிவு இல்லாத பெட்டியில் அவரது உறவினர்களுடன் வந்தார்.

ரயில் திருச்சி ஸ்ரீரங்கம் அருகே வந்த போது, முத்துமாரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது, முத்துமாரிக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

இது குறித்து தகவல் அறிந்த திருச்சி ரயில்வே பிரிவு போலீசார் முத்துமாரியை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மருத்துவமனையில் தாயும், சேயும் நலமாக உள்ளார். இதனால், திருச்சியிலிருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் அரை மணி நேரம் தாமதமாக தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+