இலங்கைக்கு உலக வங்கி 24 மில்லியன் டாலர் கடன்
வாஷிங்டன்: சர்வதேச நிதியம், இலங்கைக்கு கடன் வழங்க யோசித்து வரும் நிலையில், உலக வங்கி 24 மில்லியன் டாலர் கடனுதவியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
சர்வதேச நிதியத்திடம் (ஐஎம்எப்) பெருமளவிலான கடனுதவி கோரி விண்ணப்பித்திருந்தது இலங்கை. ஆனால் இலங்கையில் அப்பாவித் தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த நிலையில் இலங்கைக்கு கடனுதவி அளிக்கக் கூடாது என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிர்ப்பந்தம் செய்து வந்தன.
இதனால் கடனுதவி வழங்காமல் தாமதம் செய்து வருகிறது சர்வதேச நிதியம்.
இந்த நிலையில் இலங்கைக்கு 24 மில்லியன் டாலர் கடனுதவியை அளிக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கையின் சுகாதாரப் பிரிவை சீரமைக்க இந்த நிதியுதவி அளிக்கப்படுகிறதாம்.
போரிலிருந்து மீண்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறப்பு சுகாதார சேவைகளை மேற்கொள்ள இந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும் என உலக வங்கி அறிவுறுத்தியுள்ளது.
வழங்கப்படும் நிதியில் 12 மில்லியன் டாலர் பணம் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுமே செலவழிக்கப்பட வேண்டும் எனவும் அது கூறியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் இலங்கைக்கான உலக வங்கி இயக்குநர் நவோகா இஷி கூறுகையில், போரினால் ஏற்பட்டுள்ள பாதிப்பிலிருந்து இலங்கை மீள உலக வங்கி செய்யும் சேவை இது என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications