ப.சிதம்பரம்-ரித்தீஷ் வெற்றியை எதிர்த்து வழக்கு

அதே போல ராமநாதபுரத்தில் போட்டியிட்டு வென்ற திமுக வேட்பாளர் ஜே.கே.ரித்தீஷ் இலங்கையில் பிறந்தவர். அவர் இந்தியக் குடிமகன் என்று பொய்யான சான்றளித்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். எனவே அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ராமநாதபுரம் தொகுதியில் தோல்வியுற்ற அதிமுக வேட்பாளர் சத்தியமூர்த்தி வழக்கு தொடர்ந்துள்ளார்.
ராஜ கண்ணப்பன்...
ராஜ கண்ணப்பன் இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நேரில் வந்து தலைமைப் பதிவாளரிடம் வழக்கை தாக்கல் செய்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்த 15வது மக்களவை தேர்தலில் நான் அதிமுக சார்பில் சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட்டேன். அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிட்டார்.
அவர் ஏறத்தாழ 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அந்த தொகுதிக்குட்பட்ட ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் எனக்கு பதிவான சுமார் 1,400 வாக்குகள் சிதம்பரத்திற்கு பதிவானதாக தவறாக கணக்கிடப்பட்டது.
கடைசி நேரத்தில் வாக்கு எண்ணிக் கையில் ஈடுபட்ட ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டார்கள். கடைசி நேரத்தில் நடந்த வாக்கு எண்ணும் பணியில் வங்கி ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக என்னுடைய வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டது.
எனவே, சிவகங்கை மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும். சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவித்து அதனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
ரித்தீஷ் வெற்றியை எதிர்த்து வழக்கு:
அதே போல ரித்தீஷ் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக வேட்பாளருமான சத்தியமூர்த்தி வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்
திமுக சார்பில் போட்டியிட்ட ரித்தீஷ் ஒரு சாதாரண நடிகர். சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால், அவர் இந்தத் தேர்தலில் ரூ. 25 கோடிக்கு மேல் செலவு செய்தும், தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்தும் வெற்றி பெற்றுள்ளார்.
ஓட்டுக்களைப் பெற பல இடங்களில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. ஆரத்தி எடுப்பவர்களுக்கு 100 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரியாங்குடி கிராமத்தில் அம்மன் கோவில் கட்டித் தருவதாக ரித்தீஷ் உறுதியளித்துள்ளார். அதற்காக கட்டுமானப் பொருட்களை ஏற்றி வர, அவரது வாகனங்கள் யன்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் பிறந்தவர் ரித்தீஷ். இந்திய குடிமகன் என தவறான தகவல் அளித்து, தேர்தலில் மனு தாக்கல் செய்துள்ளார். எனவே, எம்பி தேர்தலில் போட்டியிடும் தகுதி அவருக்கு இல்லை. இது, தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல். எனவே, ரித்தீஷ் வெற்றி பெற்றது செல்லாது என உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications