ராமேஸ்வரத்தில் கலாம் வீட்டருகே குப்பைக் குவியல்!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீடு அருகே குப்பை பெரும் குவியலாக கிடப்பதால் அப்பகுதி வழியாக செல்லும் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிர்ச்சியுடன் செல்கிறார்கள்.
அப்துல் கலாம் ராமேசுவரத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரது பூர்வீக வீடு ராமேசுவரம் முஸ்லீம் தெருவில் உள்ளது. இந்த வீட்டில் அவரது அண்ணன் முத்துமீரா லெப்பை மரைக்காயர் அவரது மகன், பேரன், பேத்திகள் வசிக்கின்றனர்.
அப்துல் கலாம் ராமேசுவரம் வரும்போது, அவரது வீட்டுக்குச் சென்று குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களைச் சந்தித்து நலம் விசாரிப்பார்.
கலாம் முன்னாள் குடியரசுத் தலைவர் என்பதால் வீட்டுக்கு நான்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகள் கலாம் வீட்டையும் தவறாமல் பார்த்து விட்டுச் செல்வது வழக்கம்.
இந் நிலையில், இவ் வீட்டில் இருந்து 30 மீட்டர் தொலைவில் குப்பைகள் குவிந்து கிடப்பதால், அதில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவ் வழியாகச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் முகத்தைச் சுளித்தபடி செல்கின்றனர்.
முன்னாள் குடியரசுத் தலைவரின் பூர்வீக வீடு அருகே இப்படி குப்பை மலை போல குவிந்து கிடப்பதால் மக்கள் முகம் சுளிக்கின்றனர், சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியுடன் செல்கின்றனர்.
மக்கள் ஜனாதிபதி என்ற பெருமையைப் பெற்ற கலாம் வீட்டருகே குவிந்து கிடக்கும் இந்த குப்பையை அகற்ற நகராட்சி முன்வருமா..
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications