ரயிலை கடத்தியது என் மகன் அல்ல-தாய் மறுப்பு

ஏப்ரல் 29ம் தேதி பேசின் பிரிட்ஜ் ரயி்ல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மின்சார ரயிலை கடத்திய நபர் அதிவேகத்தில் ஓட்டிச் சென்று வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதினார்.
இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் ரயிலைக் கடத்தியது ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் தடாவைச் சேர்ந்த நாகராஜ் என்று கண்டுபிடித்தனர்.
நாகராஜுக்கு ரூபாவதி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இதையடுத்து ரூபாவதி, குழந்தைகள், நாகராஜுன் தாயார் லட்சுமி ஆகியோரை சென்னைக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது தனது கணவர்தானா என்பதில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார் ரூபாவதி.
அதேசமயம், உடலை பார்த்த நாகராஜின் தாயார் லட்சுமி, தனது மகன் உடல் போலத்தான் உள்ளது என்று முதலில் கூறியிருந்தார். ஆனால் இப்போது அது எனது மகன் அல்ல என்று கூறி விட்டார்.
இப்போது நாகராஜின் உடலின் டிஎன்ஏ மற்றும் தாயார், குழந்தைகளின் டிஎன்ஏவை மேட்ச் செய்யும் சோதனை நடந்து வருகிறது. இதன் முடிவு வந்த பிறகுதான் நாகராஜா, இல்லையா என்பது தெரிய வரும்.
ரயில் கடத்தலுக்கு முன்பு சில நாட்களாக நாகராஜ் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பிச்சைக்காரர் போல சுற்றிக் கொண்டிருந்ததாக பலரும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
எனவே மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ரயிலைக் கடத்தினாரா அல்லது மன நலம் பாதிக்கப்பட்டவர் போல நடித்து இப்படிச் செய்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications