பெட்டி.. சென்னை விமான நிலையத்தில் பீதி
சென்னை: சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பெட்டியால் வெடிகுண்டுப் பீதி ஏற்பட்டது. ஆனால், அந்தப் பெட்டியில் 165 வாஸ்து மீன்கள் இருந்தன.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு நேற்று சிங்கப்பூரில் இருந்து விமானம் வந்தது. அதில் இருந்த பயணிகள் இறங்கிய பிறகு அவர்களுக்கான உடைமைகள் மற்றும் சூட்கேஸ்கள் கன்வேயர் பெல்ட்டில் வந்தன.
பயணிகள் அனைவரும் தங்கள் உடைமைகளை எடுத்துச் சென்ற நிலையில் ஒரே ஒரு சூட்கேஸ் மட்டும் அங்கேயே அனாதையாகக் கிடந்தது. அது யாருடையது என்ற விவரமும் சூட்கேசில் இல்லை,
இதனால் அதில் வெடிகுண்டு இருக்குமோ என்ற பீதி ஏற்பட்டது. விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பெட்டி விமான நிலையத்தி்ன் ஒரு மூலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சூட்கேசை ஆய்வு செய்து குண்டு ஏதும் இல்லை என்பதை உறுதி செய்த பின் திறந்து பார்த்தனர்.
அதில் 3 பாலிதீன் பைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு 165 வாஸ்து மீன்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
அதை யாரோ கடத்தி வந்து அதிகாரிகளுக்கு பயந்து விட்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பெட்டியை அதிகாரிகள் சிங்கப்பூருக்கே திருப்பி அனுப்பினர்.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications