இராக்-பயங்கர குண்டுவெடிப்பில் 72 பேர் பலி
பாக்தாத்: ஷியாக்கள் அதிகம் வசிக்கும் இராக்கின் வட பகுதியில் உள்ள சதர் நகரான நடந்த பயங்கர குண்டுவெடிபபில் 72 பேர் பலியாயினர்.
ஒரு ரிக்ஷாவில் குண்டுகளை நிரப்பி அதன் மீது காய்கறிகளை வைத்து அதை நகரின் முக்கிய மார்க்கெட்டில் நிறுத்திய தீவிரவாதிகள் ரிமோட் மூலம் வெடிக்கச் செய்தனர்.
இதில் அந்த மார்க்கெட்டே சிதறிப் போனது. கடைகள் இடிந்து நொறுங்கின. பல கார்கள் தூக்கி வீசப்படடன. கடைகள் தீ பிடித்து எரிந்தன. இந்த சம்பவத்தில் 72 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர்.
மேலும் 150 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஈராக்கில் இந்த ஆண்டு நிகழ்ந்த மிக, மிக மோசமான குண்டு வெடிப்பாக இது கருதப்படுகிறது.
சம்பவம் நடந்த இந்த நகரம் ஷியா இன முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியாகும்.
ஈராக் பிரதமர் நவரி மாலிக் கூறுகையில், இத்தகைய வன்முறை காரணமாக இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவது தாமதமாகாது. திட்டமிட்டப்படி 2011ம் ஆண்டுக்குள் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறி விடும் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications