நீதிபதிகள் சொத்துக் கணக்கை கண்டறிய புதிய சட்டம் -மொய்லி
டெல்லி: நீதிபதிகளின் சொத்து கணக்கை ஆராய புதிய சட்ட மசோதா வரும் பட்ஜெட் தொடரின் போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மொய்லி கூறுகையில்,
நீதித்துறையை சுத்தமாக்கும் நோக்கத்தில் நீதிபதிகளின் சொத்து கணக்குகளை காட்ட வகை செய்யும் சட்ட மசோதா வரும் 2ம் தேதி துவங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும்.
இதற்கான சட்டம் தயாரிக்க வரைவு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம் குறித்து நீதித்துறையுடன் ஆலோசித்து வருகிறோம். விரைவில் மத்திய அமைச்சரவை கூட்டத்தின் கவனத்துக்கு இது கொண்டு செல்லப்படும்.
தற்போது நீதிமன்றத்தில் அதிக அளவில் வழக்குகள் தேங்கி கிடக்கின்றன. இதை குறைக்க ஒரு வழக்கை எடுக்க எடுத்துகொள்ளப்படும் கால அவகாசம் 15 ஆண்டுகளில் இருந்த 3 ஆண்டுகளாக குறைக்க ஆலோசித்து வருகிறோம்.
இன்றைய சூழ்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மட்டும் 50 ஆயிரத்து 613 வழக்குகள் நிலுவையில் உள்ளன. உயர் நீதிமன்றங்களில் சுமார் 38 லட்சம் வழக்குகளும், மாவட்ட நீதிமன்றங்களில் சுமார் 2.64 வழக்குகளும் விசாரணை முடிவுக்காக காத்திருக்கின்றன.
உயர் நீதிமன்றங்களில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நிலைமை தான் மோசமாக இருக்கிறது. இதை தொடர்ந்து பாட்னா, சென்னை உயர் நீதிமன்றங்களில் அதிக வழக்குகள் தேங்கி கிடக்கின்றன.
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி செளமித்ரா சென் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படு்ம். நாடு முழுவதும் 100 புதிய சிபிஐ நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
கற்பழிப்பு என்பது கொலையை காட்டிலும் மோசமானது. இதனால் கற்பழிப்பு வழக்குகளில் கடுமையான தண்டனைகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் மொய்லி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications