மூலிகை வயாகரா: சட்டசபையில் சுவாரஸ்யம்!
சென்னை: தமிழக அரசின் டாம்ப்கால் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள லபூப் சகீர் என்கிற மூலிகை வயாகரா செயல்படும் விதம் குறித்து அதிமுக உறுப்பினர் ஜெயக்குமார் சட்டசபையில் சந்தேகம் எழுப்ப, அதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் விளக்கம் அளிக்க சபையில் கலகலப்பு கூடியது.
டாம்ப்கால் நிறுவனம் சமீபத்தில் லபூப் சகீர் என்கிற மூலிகைத் தைலத்தை அறிமுகப்படுத்தியது. ஆண்மைத் திறனை அதிகரிக்க உதவும் தைலம் இது. மூலிகை வயாகரா என்றும் அழைக்கப்படுகிறது.
நேற்று சட்டசபையில் சுகாதாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது லபூப் சகீர் குறித்தும் சுவாரஸ்ய விவாதம் நடந்தது.
அதிமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் எழுந்து, லபூப் சகீரை எப்படி நம்புவது, அது உண்மையிலேயே பலன் தருமா என்று கேட்டபோது அவையில் சிரிப்பலை எழுந்தது.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், தேவைப்படுபவர்கள் மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும் என தெளிவாக குறிப்பிட்டுள்ளோமே என்று பதிலளிக்க வெடிச் சிரிப்பு கிளம்பியது.
பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் எழுந்து, அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த மருந்தைக் கொடுத்துள்ளோம். உறுப்பினர் ஜெயக்குமாருக்கும் தந்துள்ளோம்.
அவரை இதை பயன்படுத்தி சோதித்துப் பார்த்து விட்டு முடிவைச் சொல்லட்டும். ஒரு வாரத்திற்குப் பயன்படுத்திப் பாருங்கள், பின்னர் பலன் இருந்ததா, இல்லையா என்பதை என்னிடம் வந்து சொல்லுங்கள் என்று கூற சிரிப்பலை அடங்க நேரமானது.
பின்னர் தொடர்ந்து அமைச்சர் பேசுகையில் டாம்ப்கால் நிறுவனத்தின் இந்த மூலிகைத் தலைம் இதுவரை 16 டன் அளவுக்கு விற்றுள்ளது. இதன் விலை 100 கிராமுக்கு 28 மட்டுமே. இந்த தைலத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications