வயலில் பாய்ந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் என்ஜின்
நாகர்கோவில்: கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் என்ஜின் தடம் புரண்டு அருகில் இருந்த வயலில் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு தினசரி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 4.15 மணிக்குக் கிளம்பிச் செல்கிறது.
இந்த ரயில் நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி வரை பாசஞ்சர் ரயிலாக செல்லும். அதன் பின்னர் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாறி சென்னை செல்லும்.
நேற்று மாலை கன்னியாகுமரிக்கு இயக்குவதற்காக நாகர்கோவில் ரெயில்வே ஜங்ஷன் யார்டு பகுதியில் நின்று கொண்டிருந்த ரயிலை நிலையத்தின் பிளாட்பாரம் பகுதிக்கு கொண்டு வருவதற்காக லூப் லைனில் இயக்கப்பட்டது.
இந்த லூப் லைன் நாகர்கோவிலை அடுத்த கரியமாணிக்கபுரம் வரை உள்ளது. லூப் லைனின் முடிவுப் பகுதியை ரயில் என்ஜின் டிரைவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் கரியமாணிக்கபுரம் பகுதியில் ரெயில்வே பாதையின் குறுக்கே மரக்கட்டைகளால் ஆன தடுப்பும் அமைக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக லூப் லைனில் ரெயிலை இயக்குபவர்கள் கரியமாணிக்கபுரத்துக்கு முன்னதாகவே உள்ள சிக்னல் பகுதி வரை சென்று விட்டு, மீண்டும் பின்னோக்கி ரெயில் நிலையத்துக்கு இயக்குவார்கள். ஆனால் நேற்று மாலை கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கிய என்ஜின் டிரைவர், சிக்னலையும் தாண்டி இயக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரயில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. லூப் லைன் முடிவு வரை சென்ற ரயில், அங்கிருந்த தடுப்புக் கட்டை மீது மோதி இடித்து தலைகுப்புற கவிழ்ந்தது.
அதிர்ஷ்டவசமாக என்ஜின் மட்டும் அருகில் இருந்த வயலுக்குள் விழுந்து விட்டது. பெட்டிகள் அனைத்தும் விழாமல் நின்றன.
காலி ரயில் என்பதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
மீட்புக்குழுவினர் விரைந்து வந்தனர். கிரேன் எடுத்து வரப்பட்டு அதனைக் கொண்டு என்ஜின் மீட்கப்பட்டது.
இதன் காரணமாக ரயில் 20 நிமிடம் தாமதமாக சென்னை கிளம்பிச் சென்றது. அதேபோல அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலும் தாமதமாக சென்றது.
மின் ரயிலின் கொக்கி கழன்றது...
இதற்கிடையே, சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் சென்ற மின்சார ரயிலின் கொக்கி இணைப்பு கழன்றதால் 8 பெட்டிகள் பாதியிலேயே நின்று விட்டன. பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளாகினர்.
நேற்று காலை 9.25 மணிக்கு 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில் ஒன்று புறப்பட்டது. காலை நேரம் என்பதால் ரெயிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காலை 10.05 மணிக்கு இந்த ரெயில் குரோம்பேட்டை ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.
குரோம்பேட்டை ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று பயணிகளை இறக்கிய ரெயில், பின்னர் அங்கிருந்து புறப்பட்டது. ஆனால், ரெயில் புறப்பட்ட சில வினாடிகளிலேயே 4-வது பெட்டியின் பின்புறம் உள்ள கொக்கி (திடீரென்று கழன்றது. இதனால், அதற்குப் பின்னால் இருந்த 8 பெட்டிகளும் நடுவழியில் நின்று விட்டன.
ஆனால் டிரைவருக்கு அது தெரியவில்லை. அவர் பாட்டுக்கு ஓட்ட ஆரம்பித்தார்.
இந்த நிலையில், துண்டிக்கப்பட்ட எட்டு பெட்டிகளில் இருந்த பயணிகள் என்ன ரயில் நின்று விட்டதே என்று பார்த்தபோது ரயிலைக் காணாமல் திடுக்கிட்டனர். பிறகுதான் தங்களது பெட்டிகள் துண்டிக்கப்பட்டது அவர்களுக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து கடைசிப் பெட்டியில் இருந்த கார்டு உடனடியாக என்ஜின் டிரைவரா வாக்கிடாக்கி மூலம் தொடர்பு கொண்டு ரிவர்ஸில் வருமாறு கூறினார்.
உடனடியாக ரயிலை நிறுத்திய டிரைவர் ரிவர்ஸில் வந்து கழன்று போன பெட்டிகளை இணைத்த பின்னர் ரயில் மீண்டும் ஓடியது.
இந்த குழப்பத்தால் குரோம்பேட்டை நோக்கி வந்த ரயில்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன.
-
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம்












Click it and Unblock the Notifications