தஞ்சாவூரில் விசாரணை கைதி தற்கொலை-போலீஸ் காரணமா?
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்துக்கு போலீசார் தான் காரணம் என இறந்தவரின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனைத் தெருவைச் சேர்ந்தவர் பொற்கொல்லர் லட்சுமணன் (40). சமீபத்தில் இவர் திருட்டு வழக்கு தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவருடன் அவரது மைத்துனர் குமாரும் உடன் வந்தார். இந்நிலையில் குமார் டீ குடிக்க சென்று விட்டு திரும்பியபோது காவல் நிலையத்துக்குள் இருந்த மரத்தில் லட்சுமணன் தூக்கில் தொங்கினார்.
உடனடியாக, போலீசார் லட்சுமணனை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து லட்சுமணனின் மனைவி சாந்தி மற்றும் மாமியார் வசந்தா ஆகியோர் கூறுகையில்,
வலங்கைமானைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் லட்சுமணனின் மகன் முகேஷ் மற்றும் அதேபகுதியை சேர்ந்த அய்யப்பன், விக்னேஷ், ராஜேந்திரன் உட்பட 14 பேரை போலீசார் திருட்டு வழக்கு விசாரணைக்காக பத்து நாட்கள் முன்பே அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் லட்சுமணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அவரது மரணத்திற்கு போலீசாரே காரணம் என்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications